டிடிக்கு இரண்டாவது கணவர் ஆகப்போவது இவர் தானா? புகைப்படத்தினை வெளியிட்டு அறிமுகப்படுத்தினார்!!

டிடிக்கு இரண்டாவது கணவர் ஆகப்போவது இவர் தானா? புகைப்படத்தினை வெளியிட்டு அறிமுகப்படுத்தினார்!!

கடந்த 20 வருடங்களுக்கும் மேலாக தொலைக்காட்சிகளில் வெற்றிகரமான தொகுப்பாளினியாக வலம் வருபவர் திவ்யதர்ஷினி. இவர் முன்பு போல் வாரந்தோறும் தொடர்ந்து நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கவில்லை என்றாலும், முக்கிய பிரபலங்கள் கலந்துகொள்ளும் நிகழ்ச்சிகளை மட்டும் தேர்ந்தெடுத்து தொடர்ந்து தொகுத்து வழங்கி வருகிறார்.

சமீபத்தில் கூட லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா கலந்து கொண்ட சிறப்பு நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி இருந்தார். அவை சமூகவலைத்தளங்களில் செம வைரலாக பார்க்கப்பட்டது. டிடியிடம் மட்டும் சில ரகசியங்களை திரை நட்சத்திரங்கள் வெளிப்படுத்தி வருகின்றனர்.

திவ்யதர்ஷினி தற்போது உலகம் முழுவதும் பல இடங்களுக்கு சுற்றுலா சென்று வருகிறார். இந்த நிலையில் அங்கு எடுக்கப்பட்ட ஃபோட்டோக்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு வருகிறார்.

அந்த வகையில் அவர் பாரிஸில் உள்ள ஒரு உணவகத்தில் பீட்சா சாப்பிட்டுள்ளார். அந்த பீட்சா குறித்தும் அதை செய்து கொடுத்த செஃப் குறித்தும் புகழ்ந்து தள்ளியுள்ளார் திவ்யதர்ஷினி. அவரை சந்தித்து வாழ்த்தியது மட்டுமின்றி அவரை திருமணம் செய்ய விரும்புவதாகவும் பதிவிட்டுள்ளார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *