பாலிவுட் படத்துக்கு அவதாரம் எடுக்கும் இசையமைப்பாளர் அனிருத்…!!

பாலிவுட் படத்துக்கு அவதாரம் எடுக்கும் இசையமைப்பாளர் அனிருத்…!!

அனிருத் பாலிவுட் படத்துக்கு இசையமைக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தனுஷின் மனைவி ஐஸ்வர்யா இயக்கிய 3 படம் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் அனிருத். இப்படத்திற்காக அவர் இசையமைத்த முதல் பாடலான கொலவெறி அவரை உலகளவில் பிரபலமாக்கியது.

அடுத்ததடுத்த ஆல்பங்களின் மூலம் இளைஞர்களை வெகுவாக கவர்ந்த அனிருத், குறுகிய காலத்திலேயே அஜித், விஜய், ரஜினி, கமல் ஆகியோரது படங்களுக்கு இசையமைத்து முன்னணி இசையமைப்பாளராக உயர்ந்தார். இவர் கைவசம் இந்தியன் 2, காத்துவாக்குல ரெண்டு காதல், டாக்டர், டான் போன்ற படங்கள் உள்ளன.

இப்படி கோலிவுட்டில் பிசியான இசையமைப்பாளராக வலம்வரும் அனிருத், விரைவில் பாலிவுட் படத்துக்கு இசையமைக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. பாலிவுட்டில் தனுஷின் ராஞ்சனா, அத்ரங்கி ரே போன்ற படங்களை இயக்கிய ஆனந்த் எல் ராய், அடுத்ததாக இயக்க உள்ள புதிய படத்திற்கு அனிருத் இசையமைக்க உள்ளதாக கூறப்படுகிறது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *