’பிக் பாஸில் ‘கரகாட்டக்காரன்’ கனகா?

’பிக் பாஸில் ‘கரகாட்டக்காரன்’ கனகா?

கரகாட்டக்காரன் திரைப்படம் மூலமாக தமிழ் மக்களிடையே பிரபலமான நடிகை கனகா குறித்து அவ்வப்போது வதந்திகள் தொடர்ந்து வெளிவந்து கொண்டே இருக்கிறது. கடந்த சில வருடங்களுக்கு முன்னர் அவர் இறந்து விட்டதாக கூட வதந்தி பரவியது. இவர் நடித்த கடைசி திரைப்படம் விரலுக்கேத்த வீக்கம் தான்.

இந்த நிலையில் தனியார் ஊடகம் ஒன்றிற்கு பேட்டியளித்துள்ள அவர், தான் நடிக்க வந்து 30 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது சில காரணங்களால் இடையில் நடிக்க முடியாமல் போய்விட்டது. தற்போது மீண்டும் நடிக்க ஆர்வம் உள்ளதால் சினிமாவின் புதிய நுட்பங்களை கற்று வருவதாக அவர் தெரிவித்துள்ளார். இதன் மூலமாக கனகா தமிழ் சினிமாவில் ரீ என்ட்ரி கொடுப்பாரா என ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.

அதே சமயத்தில் கனகா பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் கலந்து கொள்ள போகிறார் என்றும் அதற்காக தான் இப்போது ஊடகங்களுக்கு பேட்டியளித்து வருகிறார் என்றும் ரசிகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

author

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *