விரைவில் மாநாடு ட்ரைலர்… சிம்புவே கொடுத்த அதிரடி அப்டேட்!!

விரைவில் மாநாடு ட்ரைலர்… சிம்புவே கொடுத்த அதிரடி அப்டேட்!!

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகர் சிலம்பரசன். பெயருக்கு ஏற்றது போல் அவர் கோலிவுட்டின் அரசன் தான். தனக்கென எதையும் செய்யும் ரசிகர் பட்டாளத்தை கொண்டவர். அவரது பட அப்டேட்டுகளுக்காக தான் ரசிகர்கள் காத்திருக்கிறார்கள்.

இவருடைய சமீப கால திரைப்படங்கள் ரிலீசாவதில் அடிக்கடி சிக்கலை சந்தித்தன. அதில் முக்கியமான திரைப்படம் மாநாடு. மாநாடு தொடங்கிய போது ஏகப்பட்ட சிக்கல்கள் ஆனால் தற்போது அனைத்தையும் கடந்து தீபாவளிக்கு ரிலீஸ் ஆகிறது.

இதனைத் தொடர்ந்து வெந்து தணிந்தது காடு, கொரோனா குமார், பத்து தல என அடுத்தடுத்து படங்களில் ஒப்பந்தமாகி நடித்து வருகிறார்.

இந்நிலையில் மாநாடு குறித்த சிலம்பரசனின் அப்டேட் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மாநாடு டிரைலர் விரைவில் உங்களை வந்தடையும் என்று சிம்புவின் லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்றை டப்பிங் தியேட்டரில் இருந்து வெளியிட்டுள்ளார். இதனால் அவருடைய ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *