மக்கள் செல்வனுக்கு ஜோடியான திருச்சி பொண்ணு!!

மக்கள் செல்வனுக்கு ஜோடியான திருச்சி பொண்ணு!!

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி தற்போது இயக்குனர் பொன்ராம் இயக்கத்தில் நடித்து வருகிறார். இத்திரைப்படத்தினை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.

நடிகர் விஜய் சேதுபதி ஒரு படத்தை நடித்து முடித்த கையோடு நான்கு படங்களில் கமிட்டாகி வருகிறார். அவருக்கு போட்டியாக அவரே படங்களை வெளியிடுவதும் நடந்து வருகிறது. இவருடைய வளர்ச்சி முன்னணி நடிகர்களையே பிரமிக்க வைக்கும் விதத்தில் உள்ளது அனைவரும் அறிந்ததுதான். இந்நிலையில், சமீபத்தில் நடிகர் விஜய் சேதுபதியின் 46வது படம் குறித்த அதிகாரப்பூர்வ வெளியானது. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்தில், விஜய்சேதுபதி போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். இந்த படத்தை இயக்குனர் பொன்ராம் இயக்குகிறார். இத்திரைப்படத்திற்கு டி.இமான் இசையமைக்கிறார்.

இந்நிலையில் இந்தப் படத்தில் கடந்த ஆண்டு ‘மிஸ் இந்தியா’ பட்டம் வென்ற திருச்சியைச் சேர்ந்த அனுகீர்த்தி வாஸ், விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடிக்கிறார் என சன் பிக்சர்ஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வ அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *