தெலுங்கில் சிரஞ்சீவியின் படத்திற்கு இசையமைக்க தமன் ஒப்பந்தமாகியுள்ளார்.

தெலுங்கில் முன்னணி இசையமைப்பாளராக வலம் வரும் தமன் முதல் முறையாக சிரஞ்சீவியின் படத்திற்கு இசையமைக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
மலையாளத்தில் நடிகர் ப்ரித்விராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடிப்பில் வெளியாகி ஹிட்டான படம் ‘லூசிஃபர்’. இதன் தெலுங்கு ரீமேக் உரிமத்தை சிரஞ்சீவி பெற்று அதன் ரீமேக்கில் நடிக்க உள்ளார்.
இந்த படத்தை இயக்க தெலுங்கில் பல முன்னணி இயக்குநர்கலின் பெயர்களும் அடிபட இறுதியாக ‘ஜெயம்’ மோகன்ராஜா இந்த படத்தை இயக்கும் வாய்ப்பை பெற்றார். இதனையடுத்து மற்ற நடிகர்கள் தேர்வு தற்போது நடந்து கொண்டிருக்கிறது.
அந்த வகையில் தற்போது படத்திற்கு இசையமைக்க தமன் உறுதி செய்யப்பட்டுள்ளார். இந்த தகவலை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள தமன் ‘சிரஞ்சீவி சாரின் படத்தில் முதல் முறையாக இசையமைக்க ஒப்பந்தமானதில் மகிழ்ச்சி’ என பதிவிட்டுள்ளார்.




