பருந்தாகுது ‘ஊர்க்குருவி’: நயன்தாராவுடன் இணைந்த கவின்… புதிய திரைப்பட அறிவிப்பு!!

பருந்தாகுது ‘ஊர்க்குருவி’: நயன்தாராவுடன் இணைந்த கவின்… புதிய திரைப்பட அறிவிப்பு!!

விஜய் டிவி-யில் நடிகர் கமல் ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் சீசன் மூன்றில் 17 போட்டியாளர்களில் ஒருவராக இடம்பெற்றவர் கவின்.

இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘சரவணன் மீனாட்சி’ சீரியல் மூலம் ரசிகர்களுக்கு அறிமுகமாகி நல்ல பெயரினை பெற்றிருந்தவர்.

இருப்பினும் பிக் பாஸ் நிகழ்ச்சியில், இலங்கையைச் சேர்ந்த லாஸ்லியாவுடன் ஏற்பட்ட காதலால் இந்த ஜோடிக்கு ரசிகர்கள் பெருகினர். இருவரும் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறியவுடன் தங்களுக்குள் ஒன்றும் இல்லை என வெளிப்படையாக தெரிவித்து விட்டனர்.

ஏற்கனவே “நட்புன்னா என்னானு தெரியுமா” என்ற படத்தில் கவின் நாயகனாக அறிமுகமானார். தற்போது ஹாட்ஸ்டார் வலைதளத்தில் வெற்றிகரமாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் லிஃப்ட் படத்தில் அம்ரிதா ஐயருடன் நடித்துள்ளார். இத்திரைப்படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

இந்த நிலையில், விக்னேஷ் சிவன் தயாரிப்பில் உருவாகும் ஊர்க்குருவி என்னும் படத்தில் கவின் ஒப்பந்தமாகியுள்ளார். இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று வெளியிடப்பட்டுள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *