சிறை உணவு அருவருப்பாக உள்ளது… பிஸ்கெட் சாப்பிட்டு வயிற்றை நிரப்பும் ஷாருக் மகன்!!

சிறை உணவு அருவருப்பாக உள்ளது… பிஸ்கெட் சாப்பிட்டு வயிற்றை நிரப்பும் ஷாருக் மகன்!!

மும்பை சிறையில் அடைக்கப்பட்டுள்ள நடிகர் ஷாருக்கான் மகன் ஆர்யன் கான் மேலும் சில நாள்கள் சிறையில் இருக்கவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார். இந்நிலையில் அவர் சிறையில் வழங்கப்படும் சாப்பாட்டை சாப்பிட மறுத்து அடம்பிடித்து வருகிறார்.

நடிகர் ஷாருக் கான் மகன் ஆர்யன் கான் மும்பையில் நடந்த சொகுசு கப்பல் பார்ட்டியில் கலந்து கொண்டபோது போதைப்பொருள் பயன்படுத்தியதாகக் கைது செய்யப்பட்டுள்ளார். மும்பையில் முக்கிய கிரிமினல்கள் அடைக்கப்பட்டுள்ள ஆர்தர்ரோடு சிறையில் ஆர்யன் கானும் அவருடன் கைது செய்யப்பட்ட மேலும் சில பணக்கார இளைஞர்களும் அடைக்கப்பட்டுள்ளனர். ஆர்யன் கானின் ஜாமீன் மனு மீது இரண்டு நாள்கள் விசாரணை நடந்தது. நடிகர் சல்மான்கான் குடிபோதையில் காரை விபத்துக்குள்ளாக்கிய வழக்கில் ஆஜரான வழக்கறிஞர் அமித் தேசாய் ஷாருக் கான் மகனுக்காக ஆஜராகி வாதாடினார்.

தற்போது, ஆர்யன் கான் சிறையில் வழங்கப்படும் உணவைச் சாப்பிட மறுத்து வருகிறாராம். அவருக்குச் சிறையில் காலை உணவாக அவல் உப்புமாவும், கேசரியும் வழங்கப்படுகின்றன. மதியம் சப்பாத்தி, கூட்டு, பருப்புக் குழம்பு, சாதம் வழங்கப்படுகின்றன. ஆனால் ஆர்யன் கான் சிறை உணவை சாப்பிட மறுத்து அடம்பிடித்து வருகிறார். அப்பா கொடுத்துள்ள பணத்தை வைத்து சிறை கேண்டீனில் கிடைக்கும் பிஸ்கட்களை மட்டும் வாங்கிச் சாப்பிட்டு தன்னிடம் இருக்கும் தண்ணீரைக் குடித்து வயிற்றை நிரப்பிக்கொண்டிருப்பதாக சிறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். ஆர்யன் போன்றே அவருடன் கைது செய்யப்பட்ட மற்றவர்களும் சிறை உணவை சாப்பிட மறுத்து வருகின்றனர்.

ஆர்யன் பிரச்னையால் ஷாருக் கான் வெளியில் வராமல் வீட்டிற்குள்ளே முடங்கிக்கிடக்கிறார். மகன் கைதால் ஷாருக் கான் சரியாக சாப்பிடாமல் உறக்கம் இல்லாமல் தவித்து வருவதாக கூறப்படுகிறது. அவர் மட்டுமல்லாது அவரது மனைவி கவுரிகானும் வீட்டிற்குள் முடங்கிக்கிடக்கிறார். ஷாருக் கான் எப்போது வீட்டைவிட்டு வெளியில் வருவார் என்று பத்திரிகையாளர்கள் பாந்த்ராவில் உள்ள அவரது வீட்டிற்கு முன்பு கால் கடுக்க காத்துக்கிடக்கின்றனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *