இந்த முறையாவது விஜய்க்கு கிடைக்குமா அந்த ரஜினி பட டைட்டில்.

நடிகர் விஜய்யின் 65வது படத்திற்கு ரஜினிகாந்தின் சூப்பர் ஹிட் பட டைட்டிலை வைக்க முடிவு செய்துள்ளதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன.

மீண்டும் ஏ.ஆர். முருகதாஸும் விஜய்யும் இணைகிறார்கள் என்ற உடனே ரசிகர்களின் எதிர்பார்ப்பு துப்பாக்கி 2 படம் ஆரம்பிக்கப் போகிறது என்று தான் இருந்தது. பிகில் படத்தின் இசை வெளியிட்டு விழா வீடியோவை பார்த்து விட்டு ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன் போட்ட ட்வீட்டும், ரசிகர்கள் மத்தியில் துப்பாக்கி 2 படத்திற்கான எதிர்பார்ப்பை அதிகரித்தது.

ஆனால், துப்பாக்கி 2 படம் இல்லை இது வேறு ஒரு கதை என இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் மறைமுகமாக கொடுத்த சிக்னலை அடுத்து, தளபதி 65 படத்தின் கதை என்னவாக இருக்கும் என்றும் ரசிகர்கள் யோசிக்கத் தொடங்கி விட்டனர். துப்பாக்கி 2 வரவில்லை என்றால், கூட பரவாயில்லை தளபதி விஜய்யை வேற லெவல் மாஸாக நீங்க காட்டுவீங்க என்றும் உற்சாகப்படுத்தி வருகின்றனர். விஜய்யின் 65வது படத்திற்கு ‘தளபதி’ என்ற டைட்டிலையே வைக்க ஏ.ஆர். முருகதாஸ் முயற்சி செய்து வருவதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன

ஏற்கனவே தலைவா படத்திற்கே தளபதி என்ற டைட்டில் பரிசீலனை செய்யப்பட்டு, கடைசி நேரத்தில் அந்த டைட்டில் கிடைக்காமல் போகவே தலைவா என்ற டைட்டில் வைக்கப்பட்டதாகவும், தலைவா பட பாடலில் “தளபதி தளபதி” என்ற பாடல் இடம்பெற்று இருப்பது தான் அதற்கு சாட்சி என்ற பேச்சுக்களும் அடிபட்டு வருகின்றன.

தளபதி 65 படத்தின் டைட்டில் தளபதி என வைக்கப்பட்டால் செம பக்காவாக இருக்கும் என விஜய் ரசிகர்கள், அந்த தகவல் கிடைத்ததும் உற்சாகத்தில் குதித்து வருகின்றனர்.

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *