நம்ம ரம்யா பாண்டியனா இது? உடல் முழுவதும் ஈரம் சொட்ட சொட்ட நடத்திய ஃபோட்டோ ஷூட்

நம்ம ரம்யா பாண்டியனா இது? உடல் முழுவதும் ஈரம் சொட்ட சொட்ட நடத்திய ஃபோட்டோ ஷூட்

இருளில் உடல் முழுக்க ஈரம் சொட்டச் சொட்ட நடத்திய போட்டோ ஷூட் வீடியோவை நடிகை ரம்யா பாண்டியன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு பரபரப்பை கிளப்பியுள்ளார்.

நடிகை ரம்யா பாண்டியன் கடந்த 2015-ஆம் ஆண்டு வெளியான டம்மி டப்பாசு திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இந்த படத்தை தொடர்ந்து, ஜோக்கர், ஆண் தேவதை உள்ளிட்ட சில திரைப்படங்களில் நடித்துள்ளார்.

இந்த படங்களை தொடர்ந்து கடந்த 2019-ஆம் ஆண்டு இடுப்பு தெரியும் படி சில புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு தென்னிந்திய அளவில் பிரபலமாகினார். அதன்மூலம் கிடைத்த பிரபலத்தால் பிக் பாஸ் 3-வது சீசனில் கலந்து கொண்டார்.

இந்த நிலையில், தற்போது “ராமே ஆண்டாளும் ராவணே ஆண்டாளும்” என்ற கிராமத்து கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள திரைப்படத்தில் கதாநாகியாக நடித்துள்ளார். இந்த படம் நேரடியாக அமேசான் பிரேமில் இந்த மாதம் ரிலீஸ் ஆகவுள்ளது. இத்திரைப்படத்தினை நடிகர் சூர்யாவின் 2டி எண்டெர்டெயிண்மெண்ட் தயாரித்துள்ளது.

இதற்கிடையில், தான் எடுக்கும் புகைப்படங்களை அவ்வப்போது தனது சமூகவலைத்தள பக்கங்களில் வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார். அந்த வகையில், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கும்மிருட்டில் ஈரம் சொட்டச் சொட்ட நடத்திய போட்டோ ஷூட் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவின் புகைப்படங்களும் வீடியோவும் இணையத்தில் வைரலாகி ரசிகர்களின் கவனத்தை பெற்று வருகிறது.

author

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *