இந்தியில் குவியும் படங்கள்… மும்பையில் சொந்த வீடு வாங்கிய ரஷ்மிகா!

இந்தியில் குவியும் படங்கள்… மும்பையில் சொந்த வீடு வாங்கிய ரஷ்மிகா!

நடிகை ரஷ்மிகா மந்தான்னா தற்போது தென்னிந்தியாவின் முன்னணி நடிகைகளில் ஒருவர். தெலுங்கில் ரசிகர்களை வாரிக்குவித்த ரஷ்மிகா, தமிழில் சுல்தான் படம் மூலமாக ரசிகர்களின் மனதைக் கொள்ளை கொள்ள காத்திருக்கிறார்.

தென்னிந்தியாவை அடுத்து தற்போது பாலிவுட்டிலும் கால் தடம் பதிக்க ஆரம்பித்துவிட்டார். சமீபத்தில் ரஷ்மிகா நடிப்பில் உருவாகியிருந்த ‘டாப் டக்கர்’ ஆல்பம் படம் நல்ல வரவேற்பைப் பெற்றது.

அதையடுத்து ‘மிஷன் மஞ்சு’ என்ற இந்தி படத்திலும் அவர் நடிக்கவிருக்கிறார். அடுத்து பாலிவுட்டில் தான் மிகப்பெரிய நடிகை ஆவப்போவதை உறுதி செய்த ரஷ்மிகா மும்பையில் சொந்தமாக வீடு ஒன்றையே வாங்கிவிட்டாராம்.

மேலும் அந்த வீட்டிற்குத் தேவையான பொருள்களை ஹைதராபாத்தில் இருந்து வரவழைத்தாகவும் கூறப்படுகிறது. இனி வரும் காலங்களில் ரஷ்மிகா சென்னையிலும் ஒரு வீடு வாங்க அமோக வாய்ப்பிருக்கிறது.

தற்போது சுல்தான் படம் மூலம் கோலிவுட் என்ட்ரி கொடுக்க இருக்கிறார். அதையடுத்து தளபதி 65 படத்திலும் நடிக்க இருப்பதாக கோலிவுட் சினிமா வட்டாரங்கள் சலசலத்து வருகின்றன.

ரஷ்மிகா தற்போது பாலிவுட்டில் அனைவரும் வியக்கும் படியான என்ட்ரி கொடுக்க வேண்டும் என்று தீவிரமாக நடிப்புப் பயிற்சி எடுத்து வருகிறாராம்.

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *