‘சாய்னா’ பயோபிக் ட்ரைலர் வெளியீடு : ரிலீஸ் தேதி அறிவிப்பு

‘சாய்னா’ பயோபிக் ட்ரைலர் வெளியீடு : ரிலீஸ் தேதி அறிவிப்பு

‘சாய்னா’ பயோபிக் ட்ரைலர் வெளியிட்டு ரிலீஸ் தேதி அறிவித்துள்ளது.

ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த சாய்னா நேவால் இந்தியாவிற்காக பேட்மிண்டன் விளையாட்டில் ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற முதல் இந்தியர் என்ற பெருமையைப் பெற்றவர். இந்தியாவில் புகழ்பெற்ற விளையாட்டு வீரர்களில் சாய்னா நேவால் குறிப்பிடத்தகுந்தவர்.

தோனி, மேரி கோம் உள்ளிட்ட விளையாட்டு வீரார்களின் வாழ்க்கை வரலாற்று படங்கள் எடுக்கப்பட்டு வரவேற்பை பெற்ற நிலையில், அமேல் குப்தா இயக்கத்தில் சாய்னா நேவால் வாழ்க்கை வரலாற்றுப் படம் எடுக்கப்படுவதாக கடந்த 2019 ஆம் ஆண்டு அறிவிப்பு வெளியானது.இதில், சாய்னா நேவாலாக இறகுப் பந்தை சுழற்றி அடித்து பிரனிதி சோப்ரா நடித்துள்ளார்.

வரும் மார்ச் 26 ஆம் தேதி தியேட்டர்களில் வெளியாகவுள்ளதையொட்டி இன்று ட்ரைலரை வெளியிட்டிருக்கிறது படக்குழு. ட்ரைலரில் சிறு வயது சாய்னாவாக காட்டப்படும் சிறுமியை பார்க்கும்போது ஆச்சர்யத்தில் கண்கள் விரிகின்றன. அப்படியே சாய்னாவை ஜெராக்ஸ் எடுத்ததுபோல் இருக்கிறார் அந்தச் சிறுமி. தனது சிறு வயதிலிருந்து சாய்னா சந்தித்த வெற்றி, தோல்வி, மகிழ்ச்சி, அழுகை என அனைத்தும் ட்ரைலரில் பதிவு செய்யப்பட்டுள்ளன.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *