சமுத்திரக்கனியுடன் நடிக்கிறார் பிக்பாஸ் புகழ் சாக்ஷி…

சமுத்திரக்கனியுடன் நடிக்கிறார் பிக்பாஸ் புகழ் சாக்ஷி…


நடிகர், இயக்குநர் சமுத்திரக்கனியுடன் பிக்பாஸ் புகழ் நடிகை சாக்ஷி அகர்வால் நடிக்கவுள்ளார்.


சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் காலா, தல அஜித்துடன் விஸ்வாசம் படங்களில் படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை சாக்ஷி அகர்வால். இப்படத்தை அடுத்து தற்போது சின்ட்ரெல்லா, டெடி, புரவி ஆகிய படங்களில் நடித்து வருகிறார். பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்துகொண்டு லட்சக்கணக்கான ரசிகர்களின் ஆதரவைப் பெற்றவர் சாக்ஷி.
தற்போது சாக்ஷி அகர்வால் புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார். முக்கிய கதாபாத்திரத்தில் சமுத்திரகனி நடிக்கும் இதில் அவருடன் இணைந்து ஆக்ஷன் காட்சிகளில் சாக்ஷி அகர்வால் நடிக்க உள்ளாராம்.
இந்த புதிய படத்தை எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.
விரைவில் இப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவுள்ளது.

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *