ஷங்கர்-ராம்சரண் படபூஜை தொடக்கம்!!

ஷங்கர்-ராம்சரண் படபூஜை தொடக்கம்!!

தமிழ் சினிமாவின் பிரமாண்ட இயக்குனர்களில் ஒருவரான ஷங்கர் தமிழைத் தவிர ஹிந்தியில் மட்டும் ஒரு படத்தை இயக்கி இருக்கிறார். தமிழ் திரையுலகில் மட்டுமே படங்களை இயக்குவதில் கவனம் செலுத்தி வந்த இயக்குனர் ஷங்கர் முதல் முறையாக தெலுங்கு, தமிழ், ஹிந்தி ஆகிய மொழிகளில் உருவாகும் புதிய பான் இந்தியா படத்தை இயக்கப் போகிறார்.

தெலுங்குத் திரையுலகின் முன்னணி நடிகரான ராம்சரண் கதாநாயகனாக நடிக்க உள்ள இப்படத்தின் பூஜை இன்று ஐதராபாத்தில் நடைபெற்றது. இதில் நாயகி கியாரா அத்வானி, RRR திரைப்படத்தின் இயக்குனர் ராஜமௌலி, ராம்சரணின் தந்தை மெகா ஸ்டார் சிரஞ்சீவி, பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங் ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்.

நேரடி தெலுங்கு திரைப்படமாக உருவாகும் இது தெலுங்கு திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

author

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *