புற்றுநோய் பாதித்த குழந்தைகளுடன் சிம்பு!!

புற்றுநோய் பாதித்த குழந்தைகளுடன் சிம்பு!!

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளை பற்றிய விழிப்புணர்வு மற்றும் அவர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்த உலக ரோஜா தினம் சென்னை தேனாம்பேட்டை அப்போலோ (தனியார்) மருத்துவமனையில் நேற்று கொண்டாடப்பட்டது.


இந்நிகழ்வில் திரைப்பட நடிகர் சிம்பு சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு புற்றுநோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு இனிப்பு வழங்கி அவர்களுடன் நடனம் ஆடி மகிழ்வித்தார்.

நிகழ்ச்சிக்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த நடிகர் சிலம்பரசன், “புற்றுநோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் நம்பிக்கை இழக்க வேண்டாம். அவர்கள் எப்போதும் நேர்மறையான எண்ணங்களுடன் எப்போதும் இருக்க வேண்டும் என்றார்.

திரைப்படங்களில் புகைப்பிடிப்பது போன்ற காட்சிகள் குறித்த கேள்விக்கு, புகை பிடித்தால் மட்டுமே புற்றுநோய் வராது பல வகையில் புற்று நோய் தாக்கம் ஏற்படுகிறது என்று பதில் அளித்த அவரிடம், திரைப்படங்களில் போதைப் பொருள் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் உங்களுடைய நடவடிக்கை இருக்குமா என்று கேட்கப்பட்ட கேள்விக்கு பதில் எதுவும் தெரிவிக்காமல் செய்தியாளர் சந்திப்பினை நிறைவு செய்து கொண்டார்.

author

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *