ஏமி ஜாக்சன் போல ஹீரோயின் தேடும் சிவகார்த்திகேயன்!!

ஏமி ஜாக்சன் போல ஹீரோயின் தேடும் சிவகார்த்திகேயன்!!

சிவகார்த்திகேயன் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் அனிருத் இசையில் வெளியான டாக்டர் திரைப்படம் மிகப்பெரிய ஹிட் அடித்தது.

தற்போது சிவகார்த்திகேயன் ‘இன்று நேற்று நாளை’ இயக்குனர் ரவிக்குமார் இயக்கத்தில் ‘அயலான்’ மற்றும் சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் ‘டான்’ படங்களில் நடித்து வருகிறார். இந்த திரைப்படங்களில் முறையே ரகுல் ப்ரீத் சிங் மற்றும் பிரியங்கா மோகன் நடித்து வருகின்றனர்.

இவ்விரு படங்களில், அயலான் படத்தின் படப்பிடிப்பு முழுமையாக முடிந்து, கிராஃபிக்ஸ் உள்ளிட்ட போஸ்ட் ப்ரொடக்சன் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. டான் படமும் விரைவில் முடிந்துவிடும் என்று சொல்லப்படுகிறது.

சிவகார்த்திகேயன் நடிக்கும் 21ஆவது படம் தெலுங்கில் உருவாகவுள்ளது. ‘ஜதி ரத்னலு’ எனும் சூப்பர் ஹிட் தெலுங்குப் படத்தை இயக்கிய அனுதீப் இயக்குகிறார். இந்தப் படம் காமெடி, காதல் என ரொமாண்டிக் ஜானராக இருக்கும் எனக் கூறப்படுகிறது.

படத்தின் கதை குறித்து இயக்குநர் வட்டாரத்தில் விசாரித்தபோது… “வெள்ளைக்காரப் பெண்ணை காதலித்து, கல்யாணம் செய்வது போன்ற கதைக்களமாம். அதனால், படத்துக்காக மதராச பட்டணம் படத்தில் அறிமுகமான ஏமி ஜாக்சன் மாதிரியான ஒரு வெள்ளைக்காரப் பெண் நடிகை அல்லது புதுமுகமாக இருந்தாலும் பரவாயில்லை எனத் தேடிக்கொண்டிருக்கிறார்களாம். ஜனவரியில் படப்பிடிப்பைத் தொடங்கவிருப்பதால் கதாநாயகி தேடல் சர்வதேச அளவில் விரைவுப்படுத்தப்பட்டிருக்கிறது” என தகவல்கள் வெளியாகியுள்ளன.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *