சிவகார்த்திகேயன் வெளியிட்ட எஸ்.ஜே சூர்யா திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்

சிவகார்த்திகேயன் வெளியிட்ட எஸ்.ஜே சூர்யா திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்

எஸ்.ஜே சூர்யா, யாஷிகா ஆனந்த் நடிப்பில் உருவாகியுள்ள ‘கடமையை செய்’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி கவனம் ஈர்த்து வருகிறது.

‘மாநாடு’, ’பொம்மை’, ’டான்’ உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து வரும் எஸ்.ஜே சூர்யா ’கடைமையை செய்’ படத்தில் நாயகனாக நடித்து முடித்துள்ளார். இத்திரைப்படத்தின் நாயகியாக ’பிக்பாஸ்’ புகழ் யாஷிகா ஆனந்த் நடித்துள்ளார். கடந்த 2016 ஆம் ஆண்டு சுந்தர் சி நடிப்பில் வெளியான ‘முத்தின கத்தரிகாய்’ படத்தை இயக்கிய வெங்கட் ராகவன் இத்திரைப்படத்தினை இயக்கியிருக்கிறார். இந்த நிலையில், படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி இருக்கிறது. இதனை நடிகர் சிவகார்த்திகேயன் வெளியிட்டுள்ளார்.

போஸ்டரில் எஸ்.ஜே சூர்யாவின் முகத்தை பாதி சிங்கத்தின் முகமாகவும், இரண்டு கண்களில் ஒரு கண் சிங்கப் பார்வையாகவும் இருக்க மிரட்டல் லுக்கில் வெளியிட்டுள்ளனர். அதோடு, காவல்நிலைய செங்கற்களும் போஸ்டரில் இடம்பெற்றிருப்பதால், போலீஸ் சம்பந்தப்பட்ட கதைக்களத்தைக் கொண்டது என்பதை உணர்த்துகிறது ‘கடமையை செய்’.

author

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *