போதை பொருள் பயன்படுத்தும் ஹீரோக்களும் உள்ளனர் அவர்களின் பெயரை நான் சொல்லட்டுமா – மீண்டும் ஸ்ரீ ரெட்டி…

போதை பொருள் பயன்படுத்தும் ஹீரோக்களும் உள்ளனர் அவர்களின் பெயரை நான் சொல்லட்டுமா – மீண்டும் ஸ்ரீ ரெட்டி…
போதை பொருள் பயன்படுத்தும் டாப் ஹீரோக்கள் அனைவரின் பெயரையும் சொல்ல தயாராக இருக்கிறேன் என நடிகை ஸ்ரீரெட்டி அதிரடியாக கூறியிருக்கிறார்…

போதை பொருள் பயன்படுத்தும் ஹீரோக்களும் உள்ளனர் அவர்களின் பெயரை நான் சொல்லட்டுமா – மீண்டும் ஸ்ரீ ரெட்டி

ஸ்ரீ ரெட்டியை யாராலும் மறக்கவே முடியாது அவர்களின் ஆட்டமோ அப்படி பட்டது. அவர்கள் தற்போது மீண்டும் ஒரு பிரெச்சனையை ஆரமிப்பதாக உள்ளார் போலும். திரையுலகில் போதைப்பொருள் விவகாரம் கடந்த சில வாரங்களாக பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பாலிவுட் நடிகை ரியா மற்றும் கன்னடத் திரையுலகைச் சேர்ந்த ராகினி திவேதி, சஞ்சனா கல்ராணி போன்ற நடிகைகள் போதைப்பொருள் விவகாரத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இது போன்று பல பேர்களின் பெயர்களும் அடிபட்டு வருகின்றது. இந்நிலையில் ஏற்கனவே திரையுலக நட்சத்திரங்கள் மீது பாலியல் குற்றம் சாற்றிய ஸ்ரீ ரெட்டி தற்போது அவர் தெலுங்கு சினிமாவின் டாப் ஹீரோக்களின் வீடுகளில் நடக்கும் பார்ட்டிகள் அனைத்திலும் போதைப்பொருள் பயன்படுத்தப்படுவதாகவும், போதைப் பொருள் இல்லாத பார்ட்டிகளே இல்லை என்றும் கூறியுள்ளார்.

மேலும் அவர் பல வாரிசு நட்சத்திரங்கள் நடத்தும் நடன போட்டியில் போதை பொருள் உபயோகப்படுத்துவதாகவும், பல கேடுகெட்ட செயல்கள் செய்வதாகவும் கூறுகிறார். அரசு தனக்கு தகுந்த பாதுகாப்பு தந்தாள் அவர் அனைவரின் பெயரை கூறுவதாகவும் தெரிவித்துள்ளார்.

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *