இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் தளபதி இணைவது உறுதி..!!

இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் தளபதி இணைவது உறுதி..!!

இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் தளபதி இணைவது உறுதியாகியுள்ளது.

67-வது தேசிய திரைப்பட விருதுகளில் வெற்றிமாறனின் அசுரன் படம் இரண்டு விருதுகளைப் பெற்று கவனம் ஈர்த்தது. இந்நிலையில் சமீபத்திய பேட்டியில், நடிகர் விஜய்யுடன் தான் இணைவதை அவர் உறுதிப்படுத்தியிருக்கிறார்.

விஜய்யின் 65-வது படத்தை வெற்றிமாறன் இயக்குவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ரசிகர்கள் ஆச்சர்யப்படும் விதமாக விஜய், இயக்குநர் நெல்சன் திலிப்குமாருடன் கைகோர்த்தார். வெற்றிமாறன் தற்போது சூரி ஹீரோவாக நடிக்கும் ஒரு படத்தை இயக்கி வருகிறார். இந்தப் படம் தற்போது முடியும் தருவாயில் உள்ளது.

ஆர்.எஸ்.இன்ஃபோடெயின்மெண்ட் நிறுவனத்துடன் இன்னொரு படத்திற்கும் ஒப்பந்தமாகியிருக்கிறார். தவிர, சூர்யா ஹீரோவாக நடிக்கும் ‘வாடி வாசல்’ படத்தையும் இயக்கவிருக்கிறார். இந்த கமிட்மெண்டுகள் அனைத்தும் முடிந்த பின்னர், விஜய் நடிக்கும் படத்தை வெற்றிமாறன் இயக்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *