கோப்ரா படத்தில் இர்பான் பதான் கதாபாத்திரத்தின் ரகசியத்தை வெளியிட்ட படக்குழு…!!

கோப்ரா படத்தில் இர்பான் பதான் கதாபாத்திரத்தின் ரகசியத்தை வெளியிட்ட படக்குழு…!!

கோப்ரா படத்தில் இர்பான் பதான் கதாபாத்திரத்தின் ரகசியத்தை படக்குழு வெளியிட்டுள்ளது.

டிமாண்டி காலனி, இமைக்கா நொடிகள் போன்ற படங்களை இயக்கிய அஜய் ஞானமுத்து இயக்கத்தில் விக்ரம் நடித்து வரும் 58 வது திரைப்படமான ’கோப்ரா’ படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில் கொரோனா ஊரடங்கினால் பட வேலைகள் நிறுத்தி வைக்கப்பட்டது. இப்போது படப்பிடிப்பு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், படத்தின் பாதிக் காட்சிகள் ரஷ்யாவில் படமாக்கப்பட்ட நிலையில் மீதிக் காட்சிகளையும் அங்கேயே படம் பிடிக்க வேண்டிய கட்டாயத்தில் படக்குழு இருந்தது. ஆனால் கொரோனா அச்சம் காரணமாக அங்கு செல்வது தாமதமாகிக் கொண்டே வந்தது. இதனால் அந்த காட்சிகளை செட் போட்டு இங்கேயே படமாக்கலாம் என தயாரிப்பாளர் கூறினாலும் இயக்குனர் பிடிவாதமாக இருந்தார்.

அதையடுத்து இப்போது கோப்ரா படக்குழு ரஷ்யாவுக்கு பயணம் மேற்கொண்டுள்ளதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில், படத்தில் நடிகராக அறிமுகமாகும் கிரிக்கெட் வீரர் இர்பான் பதானின் கதாபாத்திரம் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது. அவர் படத்தில் பிரஞ்சு போலீஸ் அதிகாரி வேடத்தில் நடிக்கிறாராம்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *