பாலா படத்திற்கு இசையமைக்கும் ரஹ்மான்?

பாலா படத்திற்கு இசையமைக்கும் ரஹ்மான்?

இயக்குநார் பாலா அடுத்து இயக்கும் படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க ஒப்பந்தமாகியுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.

துருவ் விக்ரமின் ‘வர்மா’ படத்திற்கு பிறகு பாலா இயக்கும் புதிய படம் குறித்தான தகவல்கள் வெளிவர ஆரம்பித்திருக்கின்றன.

கடந்த சில நாட்களுக்கு முன்பு சூர்யா, ஆர்யா, அதர்வா ஆகிய மூவரை வைத்து பாலா மல்டி-ஸ்டார் படம் இயக்க இருக்கிறார் என தகவல் வெளியானது.

அதன் பிறகு உதயநிதி ஸ்டாலின், ஜிவி பிரகாஷ், அதர்வா என அடுத்து சொல்லப்பட்டது. இதில் ஜிவி பிரகாஷ் மற்றும் அதர்வா மட்டும் உறுதியாகியுள்ளார்கள் எனவும் படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார் எனவும் சொல்கிறது கோலிவுட் வட்டாரங்கள்.

READ MORE- சூர்யாவை கைவிட்ட இயக்குநர் ஹரி?!

தகவல் உறுதியானால், பாலா படத்திற்கு ரஹ்மான் இசையமைப்பது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்தான அதிகாரப்பூர்வமான தகவல் விரைவில் வெளிவரும் என எதிர்ப்பார்க்கலாம்.

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *