கையில் வாளோடு நிற்கும் “சூர்யா 40” படத்தின் போஸ்டர் ரிலீஸ்…!!

கையில் வாளோடு நிற்கும் “சூர்யா 40” படத்தின் போஸ்டர் ரிலீஸ்…!!

கையில் வாளோடு நிற்கும் “சூர்யா 40” படத்தின் போஸ்டர் வெளியாகியுள்ளது.

சூர்யா நடிக்கும் பாண்டிராஜ் இயக்கத்தில், சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் படத்தில் நடித்து வருகிறார். சூர்யா 40 என்று குறிப்பிடப்படும், இந்த கிராமத்து திரைப்படம் தவிர, வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல் திரைப்படத்திலும் சூர்யா நடிக்கிறார்

நடிகர் சூர்யா இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் புதிய படத்தில் நடித்து வருகிறார். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்தப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக பிரியங்கா மோகனும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் சத்யராஜ், ராஜ்கிரண் உட்பட பல நடிகர்கள் நடிக்கின்றனர். சமீபத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட சூர்யா முழுமையாக குணமடைந்த பின்னர், கடந்த மாதம் முதல் படப்பிடிப்பில் கலந்து கொண்டு நடித்து வருகிறார்.

சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்தின் முதல் புகைபடத்தில் கையில் துப்பாக்கியுடன் சூர்யாவின் நிழல் இருக்கும் புகைப்படம் வெளியாகி கவனம் ஈர்த்தது. படத்தின் பர்ஸ்ட் லுக்கை வெளியிடுவார்கள் என்று ரசிகர்கள் எதிர்பார்த்திருந்த நிலையில், கையில் பெரிய வாள் வைத்திருக்கும் சூர்யாவின், பின்பக்க சில் அவுட் புகைப்படத்தை வெளியிட்டிருக்கிறார்கள். ’சூர்யா 40’ படத்தின் படப்பிடிப்பு தற்போது மதுரையில் நடைபெற்று வருகிறது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *