முன்னழகு குறித்து விமர்சித்த ரசிகருக்கு பிக்பாஸ் அபிராமி கொடுத்த பதிலடி…!!

முன்னழகு குறித்து விமர்சித்த ரசிகருக்கு பிக்பாஸ் அபிராமி கொடுத்த பதிலடி…!!

முன்னழகு குறித்து விமர்சித்த ரசிகருக்கு பிக்பாஸ் அபிராமி கொடுத்த பதிலடி வைரலாகி வருகிறது.

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமடைந்த அபிராமி. நோட்டா, நேர்கொண்ட பார்வை, களவு ஆகிய படங்களிலும் ஒரு சில வெப்சீரிஸ்களிலும் இவர் நடித்துள்ளார். தற்போது விஜய் டிவியின் முரட்டு சிங்கிள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருக்கும் இவர் இன்ஸ்டாகிராமில் ஆக்டிவ்வாக உள்ளார்.

இந்நிலையில் அபிராமியின் புகைப்படத்தை சமூகவலைத்தளத்தில் பகிர்ந்த சிலர், அவரது முன்னழகு குறித்து ஆபாசமாக கமெண்ட் செய்திருந்தனர். அவர்களுக்கு அபிராமி பதிலடி கொடுத்துள்ளார்.

அபிராமி தனது பதிவில் தெரிவித்திருப்பதாவது, “என்னுடைய மார்பு பெரிதாக இருப்பது குறித்து பலர் கருத்து சொல்கின்றனர். ஆமா, எனக்கு பெரியதுதான். காரணம் நான் தென்னிந்திய பெண். உங்கள் தாய் இல்லாமல் இந்த உலகத்துக்கு நீங்கள் வந்திருக்க முடியாது. என்னைப் பற்றி கருத்து சொல்லும் முன் உங்கள் தாயை நினைவில் கொள்ளுங்கள். பெண்களை மரியாதையாக நடத்த கற்றுக் கொள்ளுங்கள்” என கூறியுள்ளார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *