‘அரண்மனை 3’ படத்தின் ரிலீஸ் அப்டேட் வெளியீடு…!!

‘அரண்மனை 3’ படத்தின் ரிலீஸ் அப்டேட் வெளியீடு…!!

‘அரண்மனை 3’ படத்தின் ரிலீஸ் அப்டேட் வெளியாகியுள்ளது.

அரண்மனை பேய் படம் இதுவரை 2 பாகங்கள் வந்துள்ளன. சுந்தர்.சி இயக்கிய இந்த 2 பாகங்களும் வெளியாகி வசூல் சாதனை நிகழ்த்திய நிலையில் அரண்மனை படத்தின் 3-ம் பாகம் தயாராகி உள்ளது. ஏற்கனவே 2 பாகங்களை இயக்கி வெற்றிகண்ட சுந்தர் சி தான் இந்த படத்தையும் இயக்கி உள்ளார்.

இதில் கதாநாயகனாக ஆர்யாவும், அவருக்கு ஜோடியாக ராஷி கண்ணா, ஆண்ட்ரியா, சாக்ஷி அகர்வால் ஆகிய 3 கதாநாயகிகள் நடித்துள்ளனர். மேலும் விவேக், யோகிபாபு ஆகியோர் காமெடி வேடங்களில் வருகின்றனர். இப்படத்திற்கு சத்யா இசையமைத்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து தற்போது பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், இப்படத்தின் ரிலீஸ் குறித்த புதிய தகவல் வெளியாகி உள்ளது. ‘அரண்மனை 3’ படத்தை வருகிற மே மாதம் ரம்ஜான் பண்டிகையை ஒட்டி ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. விரைவில் இதுகுறித்த அறிவிப்பு வெளியாகக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *