தன் சாதனையை தானே முறியடித்த சூப்பர் ஸ்டார்… ‘அண்ணாத்த’ படத்தின் முதல் நாள் பாக்ஸ் ஆபீஸ் கலெக்ஷன் குறித்து வெளியான தகவல்..!

தன் சாதனையை தானே முறியடித்த சூப்பர் ஸ்டார்… ‘அண்ணாத்த’ படத்தின் முதல் நாள் பாக்ஸ் ஆபீஸ் கலெக்ஷன் குறித்து வெளியான தகவல்..!


சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ‘அண்ணாத்த’ திரைப்படம் முதல் நாள் வசூல் குறித்த தகவல்கள் தற்போது வெளியாகி கவனம் பெற்று வருகிறது.


சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் அண்ணாத்த படம் தீபாவளியை முன்னிட்டு (நவம்பர் 4ஆம் தேதி) நேற்று உலகம் முழுவதும் திரையிடப்பட்டது. யங் லுக்கில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவுக்கு ஜோடி போட்டு, கலகலப்புக்கு பஞ்சம் இல்லாமல் தலைவர் காளையனாக கலக்கி இருக்கும் படத்தை பார்க்க அவரது தீவிர ரசிகர்கள் இரவு ஒரு மணி முதலே திரையரங்குகளில் குவிந்து தலைவரின் படத்தை ஆடி, பாடி, மேளம் கொட்டி வரவேற்றனர்.

‘அண்ணாத்த’ திரைப்படம் தமிழகம் முழுவதும் ஆயிரக்கணக்கான திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. குறிப்பாக வெளிநாடுகளில் சுமார் 1200 திரையரங்குகளில் வெளியிட்டுள்ளதால், அதிக அளவில் வெளிநாடுகளில் வெளியிடப்படும் முதல் தமிழ் திரைப்படம் என்கிற பெருமையும் ‘அண்ணாத்த’ படத்திற்கு கிடைத்துள்ளது.

இந்நிலையில் அண்ணாத்த திரைப்படம் வெளியான முதல் நாளிலேயே சென்னை உட்பட தமிழகத்தில் 34.5 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின 168வது படமாக உருவாகியுள்ள ‘அண்ணாத்த’ படத்தை, சன் பிக்சர்ஸ் நிறுவனம் மிக பிரமாண்டமாக தயாரித்துள்ளது. கிராமப்புற பொழுதுபோக்கு அம்சங்கள், மற்றும் தங்கை சென்டிமென்டை மையமாக வைத்து இயக்குனர் சிவா இந்த படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தில் கீர்த்தி சுரேஷ், நயன்தாரா, மீனா, குஷ்பு, பிரகாஷ் ராஜ், ஜெகபதி பாபு, சூரி உள்ளிட்ட பல திரை நட்சத்திரங்கள் நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *