‘அண்ணாத்த’வுடன் மோத முடிவு செய்த ’வலிமை’?

‘அண்ணாத்த’வுடன் மோத முடிவு செய்த ’வலிமை’?

தல அஜித் குமாரின் ’வலிமை’ திரைப்படம் தீபாவளிக்கு வெளியாகவிருக்கிறது என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

எச்.வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித் ‘வலிமை’ படத்தில் நடித்து வருகிறார். ஜோடியாக ஹீமா குரேஷி நடிக்க யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். கார்த்திக்கேயா வலிமை பொருந்திய வில்லனாக நடிக்கிறார். ’நேர்கொண்ட பார்வை’ வெற்றிக்குப்பிறகு போனி கபூர் ‘வலிமை’ படத்தை தயாரித்து வருகிறார்.

சமீபத்தில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும், ‘நாங்க வேற மாரி’ முதல் பாடலும் வெளியாகி கவனம் ஈர்த்த நிலையில், விரைவில் இரண்டாம் பாடலை வெளியிட தயாராகியுள்ளனர் படக்குழுவினர். அதோடு, ’வலிமை’ படப்பிடிப்பு தற்போது நிறைவடைந்துள்ளதால் இம்மாதத்திற்குள் வெளியீட்டுத் தேதியையும் படக்குழு அறிவிக்க முடிவு செய்துள்ளனர்.

வலிமை’ கடந்த இரண்டு ஆண்டுகளாக தயாரிப்பில் உள்ளதால், படக்குழுவினர் இந்த ஆண்டுக்குள் ‘வலிமை’ படத்தை வெளியிட முடிவு செய்துள்ளனர். வரும் தீபாவளியையொட்டி நவம்பர் மாதம் ‘வலிமை’ படத்தை வெளியிட முடிவு செய்துள்ளதாக கோலிவுட் வட்டாரங்களில் தெரிவிக்கப்படுகிறது.

தீபாவளியையொட்டித்தான், சிறுத்தை சிவா இயக்கியுள்ள ரஜினியின் ‘அண்ணாத்த’ படமும் நவம்பர் 4-ஆம் தேதி வெளியாகவிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித் ‘வீரம்’, ‘வேதாளம்’, ‘விவேகம்’, ‘விஸ்வாசம்’ உள்ளிட்டப் படங்களில் நடித்திருந்தார். தற்போது, இரண்டு படங்களும் நேரடியாக மோதுவதால் எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. ஏற்கனவே, கடந்த 2019-ஆம் ஆண்டு அஜித்தின் ‘விஸ்வாசம்’ படமும், ரஜினியின் ‘பேட்ட’ படமும் பொங்கலையொட்டி வெளியாகி பலத்த போட்டி போட்டன. இதில் சூப்பர் ஸ்டாரையும் மிஞ்சி ’விஸ்வாசம்’தான் வசூல் சாதனை செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.

author

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *