நம்ப முல்லைக்கு கல்யாணமா? இணையத்தில் கசிந்த வீடியோ!

நம்ப முல்லைக்கு கல்யாணமா? இணையத்தில் கசிந்த வீடியோ!
பிரபல தொகுப்பாளினி மற்றும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர் நடிகையுமான சித்ரா அண்மையில் தொழிலதிபர் ஹேமந்த் என்பவருக்கு நிச்சயிக்கப்பட்டார்! இன்ஸ்டாகிராமில் வீடியோ வெளிவந்தது ரசிகர்களுக்கு மகிழ்ச்சி அளித்துள்ளது

தொகுப்பாளினியாக தொடங்கி தற்போது பாண்டியன் ஸ்டோர்ஸ் என்ற விஜய் டிவி தொடரில் முல்லை கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் சித்ரா. தனது எதார்த்த நடிப்பால் அனைவர் மனத்திலும் இடம் பிடித்தவர்.

சமீபத்தில் தனது ரசிகையின் பிறந்தநாளன்று அவருக்குத் தெரியாமல் அவரது வீட்டுக்குச் சென்று பிறந்தநாள் கொண்டாடி அசத்திய சித்ரா, சமூகவலைதளங்களிலும் தனது ரசிகர்கள் எழுப்பும் பல்வேறு கேள்விகளுக்கு பதிலளிப்பார்.

https://www.instagram.com/p/CEkDGlbhBf7/?utm_source=ig_embed&utm_campaign=embed_video_watch_again

கடந்த ஆகஸ்ட் 24-ம் தேதி சித்ராவுக்கு தொழிலதிபர் ஒருவருடன் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது.

இந்த ஆண்டு இறுதிக்குள் திருமணம் நடைபெற இருப்பதாக கூறப்படுகிறது. மாப்பிள்ளை புகைப்படத்தை சித்ராவே இன்னும் வெளியிடாத நிலையில் நிச்சயதார்த்த வீடியோ இணையத்தில் கசிந்தது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *