இன்று மாலை வெளியாகிறது ’வலிமை’கிளிம்ப்ஸ்!!

இன்று மாலை வெளியாகிறது ’வலிமை’கிளிம்ப்ஸ்!!

தல அஜித்குமாரின் ’வலிமை’ திரைப்படத்தின் கிளிம்ப்ஸ் இன்று மாலை வெளியாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

’நேர்கொண்ட பார்வை’ திரைப்படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு மீண்டும் எச்.வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித்குமார் ‘வலிமை’ படத்தில் நடித்து முடித்துள்ளார். அஜித்குமாருக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை காலா புகழ் ஹீமா குரேஷியும், வில்லனாக கார்த்திகேயாவும் நடித்துள்ளனர். யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். இப்படத்தின், ஃபர்ஸ்ட் சிங்கிள்‘நாங்க வேற மாரி’ வெளியாகி கவனம் ஈர்த்த நிலையில் பொங்கலையொட்டி ‘வலிமை’ வெளியாகிறது என்று தயாரிப்பாளர் போனி கபூர் அதிகாரபூர்வமாக நேற்று அறிவித்தார்.

விரைவில் டீசரும் படத்தின் இரண்டாம் பாடலும் வெளியாகும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், ‘வலிமை’ படத்தின் கிளிம்ப்ஸ் (முன்னோட்ட வீடியோ) இன்று மாலை 6 மணிக்கு வெளியாகிறது. இந்த வீடியோவில் தல அஜித்குமாரின் சண்டைக்காட்சிகள், பைக் ரேஸ் காட்சிகள் மட்டுமே முழுக்க முழுக்க இடம் பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ValimaiGlimpse என்ற ஹேஷ்டேக்கிலும் வலிமை தொடர்ந்து ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதள பக்கங்களில் ட்ரெண்டிங் ஆகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

author

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *