விஜய்யை விட விஜய் சேதுபதி தான் சூப்பர் – சிரஞ்சீவி

விஜய்யை விட விஜய் சேதுபதி தான் சூப்பர் – சிரஞ்சீவி

மாஸ்டர் படத்தில் விஜய்யை விட விஜய் சேதுபதியின் கதாபாத்திரம் தான் தன்னை ஈர்த்ததாக தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி தெரிவித்துள்ளார்.

தெலுங்கில் விஜய் சேதுபதி வில்லனாக நடித்துள்ள உப்பனா படத்தின் அறிமுக விழா நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட நடிகர் சிரஞ்சீவி விஜய் சேதுபதியின் நடிப்பும் குணமும் தன்னை வெகுவாக கவர்ந்து வருவதாகக் கூறினார். விஜய் சேதுபதி கதைகளையும், கேரக்டர்களையும் சரியாக தேர்வு செய்து நடிப்பதாக அவர் பாராட்டினார். அதற்கு உதாரணம் மாஸ்டர் படத்தில் அவர் தேர்ந்தெடுத்த பவானி கேரக்டர் என்றார். அந்தப் படத்தில் கதாநாயகனை விட வில்லன் கேரக்டர் சிறப்பாக இருந்ததாக சிரஞ்சீவி கூறினார். உப்பனா படத்தில் விஜய் சேதுபதி நடிக்க இருப்பதால் படம் நிச்சயம் வெற்றி பெறும் என்பது முன்கூட்டியே தெரிந்துவிட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *