விஜய் சேதுபதி ‘அப்பா’வாக நடிக்கிறார்..!

விஜய் சேதுபதி ‘அப்பா’வாக நடிக்கிறார்..!

விஜய் சேதுபதி ‘அப்பா’வாக நடிக்கிறார்.

‘தென் மேற்கு பருவக்காற்று’ படத்தில் சராசரி கதாநாயகனாக அறிமுகமானவர், படத்துக்கு படம் வளர்ந்து வந்த நிலையில், ‘ஆரஞ்சு மிட்டாய்’ படத்தில், வயதான ‘அப்பா’ வேடத்தில் நடித்தார். விஜய் நடித்து சமீபத்தில் திரைக்கு வந்த ‘மாஸ்டர்’ படத்தில், வில்லனாக நடித்தார்.

ஒரு படத்தில், ‘அப்பா’ வேடத்தில் நடிக்கிறார் படத்துக்கு இன்னும் பெயர் சூட்டப்படவில்லை. நகைச்சுவை நடிகர் சூரி கதாநாயகனாக நடிக்க, வெற்றிமாறன்  இயக்கத்தில் சூரிக்கு ‘அப்பா’வாக விஜய் சேதுபதி நடிக்கிறார். விஜய் சேதுபதி நடிக்கும் அப்பா வேடத்தில், முதலில் இயக்குனர்  பாரதிராஜா நடிப்பதாக இருந்தார்.

படப்பிடிப்பு ஊட்டியில் நடந்த நிலையில் கலந்து கொள்ள பாரதிராஜாவும் ஊட்டிக்கு சென்ற குளிர் கடுமையாக இருந்ததால் பாரதிராஜாவினால் குளிரை தாங்க முடியவில்லை. ‘‘என்னால் இந்த குளிரை தாங்கிக்கொண்டு நடிக்க முடியாது’’ என்று கூறிவிட்டு, அவர் சென்னை திரும்பி விட்டார். ‘அப்பா’ வேடத்தில், விஜய் சேதுபதி நடித்துக் கொண்டிருக்கிறார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *