நக்சலைட்டாக விஜய் சேதுபதி… விடுதலை திரைப்படத்திலிருந்து வெளியான புகைப்படங்கள்!!

நக்சலைட்டாக விஜய் சேதுபதி… விடுதலை திரைப்படத்திலிருந்து வெளியான புகைப்படங்கள்!!

தேசிய விருது வென்ற இயக்குனர் வெற்றிமாறன் தனுஷுடன் ‘அசுரன்’, ‘பாவக்கதைகள்’ படங்களைத் தொடர்ந்து நடிகர் சூரியுடன் இணைந்து பணியாற்றும் திரைப்படம் “விடுதலை”. தற்போது இந்த படம் உருவாக்கத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வருகின்றன.

இந்த திரைப்படம் எழுத்தாளர் ஜெயமோகனின் துணைவன் சிறுகதையை அடிப்படையாக வைத்து உருவாகிறது. இந்தப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதி நக்சலைட்டாக முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். படத்தின் நாயகனாக சூரி நடிக்கிறார். இந்தப்படத்திற்கு இசையமைப்பாளர் இளையராஜா இசையமைத்து வருகிறார். கௌதம் மேனன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

ஒளிப்பதிவாளர் வேல்ராஜ் ISC ஒளிப்பதிவு செய்கிறார். ஜாக்கி கலை இயக்குனராக பணியாற்றுகிறார். பீட்டர் ஹெய்ன் சண்டைக்காட்சி இயக்குனராக பணியாற்றுகிறார். இந்தப்படத்தை RS Infotainment தயாரிப்பாளர் எல்ரெட் குமார் தயாரித்து வழங்குகிறார். இவர் ஏற்கனவே கோ, கவண் போன்ற வெற்றி திரைப்படங்களை தயாரித்தவர்.

விடுதலை திரைப்படத்தின் முக்கிய படப்பிடிப்பு காட்சிகள் சத்தியமங்கலம், திண்டுக்கல் சிறுமலை சுற்றுவட்டாரப்பகுதிகளில் படமாக்கப்பட்டது. தற்போது கடலூர் பன்ருட்டியில் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் நடிகர் விஜய் சேதுபதி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விடுதலை திரைப்படத்தினை படமாக்கும் போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். அந்த புகைப்படங்கள் தற்போது கவனத்தை ஈர்த்து வருகிறது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *