Monday, September 14, 2026
  • Login

No products in the cart.

SeithiAlai
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
Shop
No Result
View All Result
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
No Result
View All Result
SeithiAlai
No Result
View All Result
Home படைப்புகள்

அஸ்திவாரம்

October 1, 2020
– மு. தனஞ்செழியன்

“ஓடுரா…. ஓடுரா…. இன்னைக்கு நம்மள பதம் பார்க்காமல் அதுவிடாது போலயே” என்று பின்னங்கால் பிடறியில் பட தலைதெறிக்கும் அளவிற்கு ஓடிக்கொண்டிருந்தான், ராமு. அவளை ஒரு செவலை கலர் நாயொன்று துறத்திக் கொண்டிருந்த்து.

மாலை நேரம் என்பதால் வீதிகள் அனைத்திலும் பிள்ளைக்காடுகள் விளையாடிக்கொண்டிருந்தன. ஆனால் அந்த நாய் விடாமல் இவனை மட்டும் துரத்திக் கொண்டிருந்தது. காபர் வீட்டை தாண்டும் பொழுது, காபர் மட்டும் அந்த நாயை தடுத்து நிறுத்த “அரே.. சைத்தான்.. சைத்தான்…” என்று நாய் வரும் பாதையில் தனது தலையில் வைத்திருந்த குல்லாவை நாயின் மீது தூக்கி வீசி இரண்டு கைகளையும் நீட்டி நின்றுவிட்டார்.

செய்தி அலை சிறுகதை போட்டி முடிவுகள்…

மனப் ‘பாங்கு’

வணக்கம் வாசக எழுத்தாளர்களே….

அவரின் உயரம் 7 அடி அளவு இருக்கும். அந்த ஊரில் யாராவது அவருடன் பேச வேண்டும் என்றால், அவர்களது தலையை 45 டிகிரி மேல் நோக்கி பார்த்தவாறு தான் பேச முடியும், மனிதன் அந்த அளவுக்கு உயரம். அவரும் அந்த ஊரிலேயே ஒரு இலவச பாடசாலை நடத்தி வரும் அன்பர். அந்த எழடி உயர மனிதரின் உயரத்தையே.. இந்த செவலை நாய் தாண்டி குதித்து, ராமுவை விடாமல் துரத்திக் கொண்டிருந்தது. மற்ற அனைவரும் வழக்கம்போல வேடிக்கை மட்டும் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

அய்யோ ஆத்தி !… என வடக்குத் தெருவெல்லாம் சுற்றி வந்தான் ராமு.

ராமு மிகவும் அழகான தோற்றம் உடையவன். பார்ப்பதற்கு வசீகரமான கண்களையும், அவனுடைய நிறம் சற்று வித்தியாசமாகவே இருக்கும். ஆனால், அனைத்துப் பெண்களுக்கும் அவனை பார்த்தவுடன் பிடித்துப்போகும் அளவிற்கு அழகானவன்.

பகலில் எத்தனை சூரியன் இருந்தாலும், ஒரு கருமை மட்டுமே சூழ்ந்த மிகவும் அடர்த்தியான காடு தான் அது. அதனாலேயே அந்தக் காட்டை பலரும் கருப்பர் காடு என்று அழைப்பார்கள். யாராவது ஒருவர் வழி தெரியாமல் அந்த காட்டினுள் சிக்கிக்கொண்டால், எந்தத் திசையில் இருந்து வெளிவர நினைத்தாலும் குறைந்தது 14 ஆண்டுகளாவது ஆகிவிடும்.

அந்தக் காட்டின் எல்லாத் திசைகளிலும் சுற்றி வருபவன் ராமு. எப்பொழுதும் காடுகளைச் சுற்றி வந்து, அங்கே இருக்கும் மரங்களை உயிருள்ள பிராணிகளை போல் நேசிப்பவன். ஆகையால் அவன் ஒவ்வொரு மரங்களை வெட்டும் பொழுதும், அவைகளிலிருந்து அவன் பெறுவது கறித்துண்டுகள் என்று அவன் எண்ணிக் கொள்வான். அவன் சந்தையில் கூட மரக்கறிகள் என்றுதான் கட்டைகளை விற்பான். விலங்குகளை வெட்டி எப்படி கறி என்று சொல்வதைப் போல், இவன் மரங்களையும் வெட்டி மரக்கறிகள் என்றும், மரத்திற்கு அவன் உணர்வை வெளிப்படுத்துவான்.

அப்படி வெட்டும் கறிகளை சந்தையில் விற்றுப் பிழைப்பு நடத்தி வந்தவன், காடுகளில் சுற்றித் திரியும்போது கொடூரமான விலங்குகளிடம் இருந்து தன்னைக் காத்துக் கொள்வதற்காக, வில்லும் அம்பும் தனது தோள் பட்டையில் எப்பொழுதும் ஏந்தி நிற்பான். ஆனால் இதுவரையிலும் அவன் எந்த ஒரு விலங்கையும் கொன்றதே இல்லை. கொடிய மிருகங்கள் கூட இவனைப் பார்த்து ஒதுங்கிப் போன அபூர்வமான நிகழ்வுகள் நடந்ததுண்டு.

காட்டில் இருக்கும் விலங்குகளை எல்லாம் சமாளிக்க தெரிந்த ராமுக்கு, இந்த நாட்டில் இருக்கக்கூடிய நாய்களை சமாளிக்கத் தெரியவில்லை. அவைகளைப் பார்த்த உடனே, ராமும் ஓட்டம் எடுக்க ஆரம்பித்து விடுவான்.

அதைப்போன்ற ஒரு சம்பவம் தான் அன்றும் நடந்துக் கொண்டிருந்தது. இவன் சந்தையில் மரக்கறிகளை தூக்கிக் கொண்டு விற்க  செல்கையில், எதிரில் ஒரு செவலை நாய் இவனைப் பார்த்து உர்ர்ர்ர்…. என்ற குரலுடன், கால்களை பின்னோக்கியும், இவன் மீது பாய்ந்து கடித்துவிடும் அளவிற்கு வேகமாக முன்னேறியது. அதைப் பார்த்தவுடன் மரக்றிகளை கீழே போட்டுவிட்டு ஓட்டம் பிடிக்க ஆரம்பித்தான் ராமு.

ராமுவை விரட்டும் நாயானது, யோக்கியன் உடையது. அந்த ஊரில் அனைவரும் அவனை யோக்கியன் என்று தான் அழைப்பார்கள். அந்தளவுக்கு ஊர் மக்கள் மத்தியில் மரியாதையுடனும், மதிப்புடனும் நடந்துக் கொள்வான். ஒரே நிற ஆடையை எப்பொழுதும் அணிந்துக் கொண்டிருப்பான். தாய் மொழியைத் தவிர வேறு எந்த மொழியும் அவனுக்குத் தெரியாது. அவ்வப்போது எங்காவது யாராவது பேசும் ஆங்கில வார்த்தைகளை காதில் கேட்டுக்கொண்டு, அதை மனப்பாடம் செய்துக்கொண்டு, எப்போதாவது அதைப் பயன்படுத்துவான்.

ஆனால் அவனுக்குள் பல்வேறு விதமான தீய எண்ணங்கள் அக வழியாக நடந்துக் கொண்டிருந்தது. அவன் இந்த ஊர் மக்களிடையே நல்லப் பெயர் வாங்கினாலும், அவனுக்குக் குறிப்பிட்ட சிலர் அந்த ஊரில் இருப்பதே பிடிக்காது.

ராமு யோக்கியன் வீட்டைத் தாண்டி ஓடும்போது, அவனை துரத்தி வந்த நாய் சாப்பிட்டிற்காக நின்று விட்டது. அந்த நேரம் பார்த்து வெளியே வந்த யோக்கியன்…

“சோம்பேறி நாயே… ஒரு நாளவாது அவன புடிக்கிரிங்கலா..” என திட்டிக்கொண்டு, எப்படியாவது அவனை நம்ம பக்கம் இழுத்து விட வேண்டும் என்று தனது மனதில் எண்ணிக்கொண்டு, கையில் வைத்து இருந்த கறி துண்டுகளை தூக்கி எறிந்தான்.

ராமுவின் மனைவி மாதவி, தன் கணவர் வருகைக்காக வாசலில் காத்திருந்தாள். இன்றைக்கு அவளது கணவர் எப்படியாவது வியாபாரம் முடித்துவிட்டு, வீட்டிற்கு வரும்பொழுது தேவையான பண்ட பாத்திரங்கள் உடன் வருவார் என்ற எதிர்பார்ப்புடன் காத்துக்கொண்டு இருந்தால், உலை வைக்காமல்.

பெருமூச்சு இரைச்சலுடன் தனது வீட்டு வாசல் திண்ணையில் வந்து கைகால்களை நீட்டிப் படுத்துவிட்டான், ராமு.

மாதவி “என்னங்க இன்னைக்கும் இடையார் விட்டு சோறு தானா!..” என்று கூறிவிட்டு பாத்திரங்களை எடுத்துக்கொண்டு இடையார் வீட்டை நோக்கி நடக்க ஆரம்பித்தாள். அந்த ஊரிலேயே ஆடு, மாடுகள் அதிக அளவில் வைத்து விவசாயமும், வியாபாரமும் செய்து வந்தார். வாரக் கிழமைகளில் இறைச்சிக் கடை நடத்தி, அந்த ஊரில் பிழைப்பு நடத்திக் கொண்டிருந்தார்.

ராமுவிற்கு மிகவும் நெருங்கிய சினேகிதர், இடையார் தான். ராமுக்கு என்ன பிரச்சினையாக இருந்தாலும், இடையார் தான் தீர்த்து வைப்பார். பல சமயங்களில் பண உதவியும், இதுபோன்ற கஷ்ட காலங்களில் உணவு வழங்கியும், ராமுவின் குடும்பத்தை இடையார் காத்து வந்தார்.

வாசல் திண்ணையில் காத்திருந்த இடையார் “என்ன மாதவி இன்னைக்கும் ராமு வெறும் முச்சை கொண்டு வந்தானா… இல்ல போரும் முச்சக் கொண்டு வந்தன.. என்று கின்டாலாக கேட்டார்.

“அட! போங்க அண்ணே.. அந்த மனுசன் எப்போ சந்தைக்குப் போனாலும், இந்த செவலை நாய்ங்க விடுவதாய் இல்லை. பாவம் மனுஷன் அதுங்களுக்கு பயந்து ஓடி ஓடியே கால்கள் வலிக்க சொக்கிப்போய் திண்ணையில கிடக்கிறார்… தண்ணீர் கூடக் குடுக்காமல் புள்ளைங்க பசியாக இருக்கும்னு, நான் இங்கே கொஞ்சம் சோறும், குழம்பும் வாங்கிட்டு போகலாமுன்னு வந்தேன்.” என மாதவி சொல்லி முடிப்பதற்குள்.

இடையார் “அட என்ன மாதவி.. இதெல்லாம் போய் கேட்டுக்கிட்டு.. உள்ள அடுப்பங்கரையில் இருக்கு… போய் என்ன வேணுமோ எடுத்துக்கோ… எல்லாமே இப்பதான் செஞ்சு வச்சுருக்கா..” என்ற தனது விசாலமான மனதுடன், மாதவியை தன் வீட்டிற்குள் அனுமதித்தார்.

இடையார் வீட்டில் கிடைத்த சோரையும், குழம்பையும்  வாங்கிக்கொண்டு வேகமாய் வீடு திரும்பிக் கொண்டிருந்தாள்.

களைப்பில் படுத்து இருந்த ராமுவிடம் வந்து மாதவி, “என்னங்க எந்திரிங்க சோறு கொண்டு வந்திருக்கேன். சாப்பிட்டுப் படுங்க. ரொம்ப களைப்பா இருக்கீங்க.” என்றவுடன் தட்டுத்தடுமாறி நிதானித்து எழுந்து வீட்டிற்குள் வந்தான் ராமு. அவள் கொண்டுவந்த சோற்றை முதலில் குழந்தைகளுக்கு கொடுத்துவிட்டு, ராமுக்கும் ஒரு பங்கை ஒதுக்கிக் கொண்டிருந்தாள்.

மாதவி பெரிதும் உணவு உண்பதில் நாட்டம் கொள்ளமாட்டாள்… கிடைக்கும் உணவை குழந்தைகளுக்கும், கணவனுக்கும் பகிர்ந்து அளித்துவிட்டு, எஞ்சியதை மட்டுமே உண்டுவிட்டு உடலும் மெலிந்தவாறு இருந்துக் கொள்வாள்.

வயிறு நிறைந்ததும் குழந்தைகள் இரண்டும் வீட்டின் ஓடு் வழியாக தெரிந்துக் கொண்டிருந்த நிலா வெளிச்சத்தில் இதமாய் தூங்கிக் கொண்டிருந்தன.

அன்று இரவு ராமுவும் மாதவியும். பேச ஆரம்பித்தார்கள்.

“இந்த யோகி வேண்டும் என்றே, நான் சந்தைக்கு வர்ற நாளெல்லாம் பார்த்துதான் அவன் நாயை அவுத்து விட்றான்… அவனுக்கு நான் அவன் கூட சேர்ந்துக்கிடனும்-னு ஆசை. ஆனால் அவர் வந்து ரொம்ப கெட்ட.. பையனா இருக்கான். வெளி உலகத்துல நல்லப் பேரை வாங்கிக்கிட்டு, தப்பான பல தொழில்கள் செஞ்சுக்கிட்டு, இந்த ஊரை ஏமாத்திக்கிட்டு இருக்கான். அவன் செய்கிற பல சாதி வேலைகளை எனக்கு மட்டும்தான் தெரியும். அதனா வெளியில் சொல்ல கூடாதுன்னு அவன் என்ன அவன் கூட்டாளியா சேர்த்துக்கொள்ள நினைக்கிறான்டி”

“ஆமாய்யா நான் கூட கேள்விப்பட்டேன்… அந்த யோக்கியன் பேருக்கு எத்தா மாதிரி நடந்துக்கிறவன் இல்லையாமே… இங்கப் பாரு ஜனங்க அவன தானே நம்பிக்கிட்டு இருக்குது. இந்தக் காலத்துல யோக்கியம் மாதிரி பேசுற ஆளுங்கள நம்புற மக்கள் ஜாஸ்தியா இருக்கிற வரைக்கும், யோக்கியம் மாதிரி ஏமாத்துற ஆளுன்னு ஊருக்கு ஒருத்தர் வந்துக்கிட்டு தான் இருப்பாங்க. என்ன செய்யுறது நம்ம விதியை நினைச்சு நம்ம வாழ்ந்துட்டுப் போக வேண்டியதுதான்.” என மாதவியும் தன் பங்களிப்பை செய்து கொண்டு இருந்தாள்.

“இல்லடி மாதவி அவன் நம்மள இப்படியே விடமாட்டான். என்னைக்கு இருந்தாலும் அவனால நமக்கு ஏதாவது ஆபத்து இருக்கு!… நமக்கு இல்லை என்றாலும், நம்ம குழந்தைகளுக்காவது அவனால் ஏதாவது தொல்லை கண்டிப்பா இருக்கும். அதனால விடியட்டும்… நான் இதுக்கு ஒரு முடிவு கட்டுகிறேன் என்று பேசிவிட்டு, அன்று இரவு இருவரும் ஒன்றாக தூங்கப் படுத்துவிட்டனர்.

மாதவி “அதெல்லாம் சரிங்க… எதுக்கும்.. இதைப் பத்தி ஒரு வார்த்தை இடையார் கிட்ட பேசிவிடலாம்..”

அந்த ரம்மியமான இரவின் நிலவு ஒளியில், அவன் மனைவி சொன்னது எதுவும் அவன் காதுகளில் விழவில்லை. கிரிச்… கிரிச்…!  என தவளைகளின் சத்தம்தான் கேட்டுக் கொண்டிருந்தது.

அன்று மறுநாள் காலை விடிவதற்கு முன்னால், ராமு யோக்கியன் வீட்டு வாசலின் முன்னால் போய் காத்துக் கொண்டிருந்தான். யோக்கியன் எப்பொழுதும் அதிகாலை எழுந்து நடைபயிற்சி செல்வது வழக்கம். அதற்கு ஆயத்தமாகிக் கொண்டிருந்த யோக்கியன், வெளியில் வந்தவுடன் அவன் சந்தித்த, முதல் நபர் ராமு.

“என்ன ராமு… இந்த நேரத்தில் வந்து இருக்க?

அது.. அதுவந்து…. என்று அந்த விடியற்காலை பொழுதில் தலையைச் சொறிந்துக்கொண்டு, யோக்கியன் முன்னால் சற்றுப் பதட்டத்துடன் பேசத் தொடங்கினான்.

“இப்பல்லாம் முன்ன மாதிரி காட்ல வேலை கிடைக்க மாட்டேங்குது. அதனால நம்மக்கிட்டயே ஏதாவது வேலைக்கு சேர்ந்து விடலாம் என்று சொல்லி.. தாங்க உங்க கிட்ட கேட்கலாம்னு வந்து இருக்காங்க!” யோக்கியானுக்கு ஆச்சரியமாகவும், மனதிற்குள் அளவில்லா சந்தோஷம் பெருகி ஊற்றாய் நிரம்பிக் கொண்டிருந்தது.

“நம்மப் பண்ணையிலேயே சேர்ந்துரு ராமு… உனக்கு இங்கேயே தங்கி வேலை செஞ்சா தானே, நம்ம பண்ணை வேலைகள் எல்லாம் முழுசா கவனிக்க முடியும். உன்னை வச்சு நம்ம பண்ணைய இன்னும் நல்லா டெவலப் பண்ணனும்…. அதனால நீ என்ன செய்ற… நம்ம பண்ணையிலேயெ தங்கிரு. உனக்கு நான் ஒரு புது வீடு கட்ட சொல்றேன்”. என்று யோக்கியன் ராமுவிடம் கூறி, ராமுவை தன் பண்ணையில் சேர்த்துக் கொள்கிறான்.

ராமு தனது மனைவி மாதவியுடன் இரண்டு மகன்களுடன், யோக்கியன் பண்ணையில் வந்து சேர்ந்து விடுகிறான். அன்றிலிருந்து இரண்டு நாட்கள் கழித்து ராமுவிற்கு புதிதாக வீடு கட்டுவதற்கு அஸ்திவாரம் போடப்படுகிறது…..

– கதைப் படிக்கலாம் – 111

இதையும் படியுங்கள் : ஓர் உல்லாசப்பயணம்

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
Previous Post

பெண்களை ஏமாற்றித் திருமணம் செய்வதைத் தடுக்க நீதிமன்றம் அறிவுரை !

Next Post

நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 93-வது பிறந்த நாள் விழா!!

Next Post

நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 93-வது பிறந்த நாள் விழா!!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Most Recent

“வெள்ளத்தால் மின் உற்பத்தி பாதிப்பு: நேபாளத்திற்கு 654 மெகாவாட் மின்சாரம் ஏற்றுமதி செய்ய இந்தியா அனுமதி”

September 14, 2026

வீடு வாங்குவது இன்னும் காஸ்ட்லியாகிறது! சென்னையில் விலை 13% உயர்வு — என்ன காரணம்?

September 14, 2026

சாம்பியன் சண்டே! ஒரே நாளில் இந்தியாவுக்கு 3 ஆசியக் கோப்பைகள்

September 14, 2026

உருகும் இமயமலை… இந்தியாவில் 189 பனிப்பாறை ஏரிகள் அபாயத்தில்; 56 ஏரிகளுக்கு மிக அதிக ஆபத்து! அடுத்து என்ன நடக்கும்?

September 14, 2026

நிறைவடைந்த BRICS மாநாடு: AI முதல் உலக வர்த்தகம் வரை… டெல்லியில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகள் என்ன?

September 13, 2026

7 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவில் ஜி ஜின்பிங்; மோடி சந்திப்பில் என்ன பேசப்பட்டது?

September 12, 2026
Load More

Categories

  • Featured
  • Sponsored Content
  • அரசியல்
  • அறிய வேண்டியவை
  • அறிவியல்
  • ஆட்டோ மொபைல்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி
  • சாதனை மனிதர்கள்
  • சினிமா
  • சிறப்பு கட்டுரைகள்
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தமிழ்நாடு சட்டசபை தேர்தல் 2021
  • தொழில் நுட்பம்
  • படைப்புகள்
  • புகைப்பட தொகுப்பு
  • ராசி பலன்
  • லைப் ஸ்டைல்
  • வணிகம்
  • வலைஒளி
  • விளையாட்டு
  • வேலை வாய்ப்பு
  • About
  • Disclaimers
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact us
For Advertisement
Contact: 9176530083

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

No Result
View All Result
  • Login
  • Cart
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Go to mobile version