Monday, September 14, 2026
  • Login

No products in the cart.

SeithiAlai
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
Shop
No Result
View All Result
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
No Result
View All Result
SeithiAlai
No Result
View All Result
Home படைப்புகள்

புகைப்படம்…

September 15, 2020
– எஸ். ராம்கபிலன்

கல்லூரியின் முதன்மை பேராசிரியரிடமிருந்து ஒரு சுற்றறிக்கை வந்தது.

அதில், குடும்பத்தின் வருட வருமானம் ஐம்பது ஆயிரத்திற்கு கீழ் உள்ள மாணவர்கள், மீ.கா நினைவு ஊக்கத்தொகை படிவத்தில் விண்ணப்பிக்கலாம் என்றும்… அதிலிருந்து, மிகக் குறைவாக வருமானம் ஈட்டும் குடும்பத்தினரை தேர்ந்தெடுத்து, பத்தாயிரம் ரூபாய் காசோலை வழங்கப்படும் என்று எழுதியிருந்தது.

ஆதார் கார்டில் உள்ள உங்கள் புகைப்படத்தை ஈஸியா மாற்றலாம்… அதுவும் ஆன்லைனிலேயே…

கடற்கரையில் போஸ் கொடுத்துள்ள பிக்பாஸ் ஜூலி..!

செய்தி அலை சிறுகதை போட்டி முடிவுகள்…

மொத்தமாக எங்கள் கல்லூரியில் இருந்து நானூற்று பதிமூன்று படிவங்கள் விண்ணப்பிக்கப்பட்டன.

பிப்ரவரி மாதம் என்பது இயற்கைக்கு மட்டுமல்ல, கல்லூரிகளுக்கும் வசந்தக்காலம் தான். இதுவரை, அந்த ஆண்டில் நடந்த அனைத்து விதமான போட்டிகளுக்கும், நல்ல மதிப்பெண்கள் பெற்றவர்கள் என அனைவருக்கும், கல்லூரி ஆண்டு விழாவில் தான் பரிசலிக்கப்படும்.

நடனம், கவிதை, பேச்சுப் போட்டி என அனைவரும் அவர்களது திறமையை வெளிப்படுத்துவதற்கான களம் என்பதால், அந்த மாதத்தில் வகுப்புகளே இருக்காது.

அன்று நடனப்பயிற்சி செய்துக்கொண்டிருக்கும் போது, ரமேஷ் பாபுவை பேராசிரியர் தனியாக அழைத்துச்சென்று ஏதோ…பேசினார்.

அவன் திரும்பி வந்ததும்…

என்ன ரகசியம் என்று ஆர்வமாக கேட்டேன்..

மீ.கா ஊக்கத்தொகை எனக்கு தான் கொடுக்கப் போறாங்களாம்.

இந்தாண்டு எப்படி கல்விக் கட்டணம் செலுத்துவது என்ற பயத்திலே இருந்தேன்.

அப்பா, இந்தப் பணத்தை சம்பாதிக்க ஐந்து மாதங்களாவது ஆகும் என்று மெதுவாகக் கூறினான்.

தோழில் தட்டிக் கொடுத்துவிட்டு, மீண்டும் எங்கள் பயிற்சியை தொடங்கினோம்.

ஆண்டு விழாவிற்கு பிரபலமான நடிகர் வர இருப்பதால், ஊர் முழுவதும் எங்களுடைய விழாவைப் பற்றிய பேச்சு தான்.

முகம் தெரியாதவர்கள் எல்லாம் விழாவைப் பற்றிப் பேசும் போது, மிகவும் உற்சாகமாக இருக்கும்.

விழாவிற்கு இரண்டு நாட்கள் முன்பிருந்தே, ரமேஷ் கல்லூரிக்கு வரவில்லை. அலைபேசியிலும் தொடர்புக் கொள்ள முடியவில்லை, வீட்டிற்கு சென்று பார்த்தப் போதும் அவன் இல்லை.

விழாவிற்கு வருவானா? அவனுக்கு என்ன ஆனது என்ற குழப்பத்திலே அனைவரும் இருந்தோம்.

நடனப் போட்டியில் அவனுக்கு பதிலாக சதிஷ் கலந்துக் கொண்டான்.

போட்டி முடிந்ததும், நடனமாடிய அனைவரும் மேடை முன் உள்ள இரண்டாவது வரிசையில் உட்கார்ந்திருந்தோம்.

அருகிலேயே மெளனமாக உட்கார்ந்திருந்தான் ரமேஷ்.

என்ன ஆச்சு? ஏன் கல்லூரிக்கு வரவில்லை? என்று கேட்டதற்கு, பதில் கூறாமல் அமைதியாக தலைக் குணிந்தபடியே இருந்தான்.

இதுவரை பாட்டு, நடனம், கைதட்டுகள் என சத்தமாக இருந்த விழா, மீ.கா ஊக்கத்தொகை அறிவிப்பு வந்ததும் அமைதியானது.

மேடையில் உள்ளப் பெரியத் திரையில், ரமேஷின் குடும்பநிலை… ஒரு ஆவணப்படமாக வெளியிடப்பட்டது.

அந்தக் காணொளியில் ரமேஷின் அம்மா, முதலில் கண்ணீர் குரலில் சிறிது நேரம் பேசியப் பிறகு… அப்பா, அவர்களின் குடும்ப நிலையையும், கஷ்டங்களையும் எடுத்துக் கூறினார்.

முடிவில் ரமேஷ்-க்கு ஆசிரியர் எழுதிக்கொடுத்த வசனங்களை கண்ணீருடன் ஒப்பித்து விட்டு, மீ.கா குழுமத்திற்கு நன்றி என கையெடுத்துக் கும்பிட்டான்.

காணொளி முடிந்ததும், காசோலை வாங்குவதற்காக ரமேஷை மேடைக்கு அழைத்தனர்.

ஏதோ ஒரு சிந்தனையில், முகத்தில் வியர்வை வடிய அமைதியாக உட்கார்ந்திருந்தான்.

அவனை எழுப்பி மேடை வரை அழைத்துச் சென்றேன். மெல்லமாக மேடை ஏறினான்.

அப்போது விழாவே, மையான அமைதியாக இருந்தது.

தலைக் குணிந்தபடியே காசோலையை வாங்கிக் கொண்டு திரும்பும் போது, முதன்மை ஆசிரியர் அவனின் கையைப் பிடித்து, புன்னகையுடன், புகைப்படம் எடுக்கணும் ரமேஷ், சற்று நில்.. என்று சிரித்துக்கொண்டே, கொடுத்த காசோலையை வாங்கி மீண்டும் அவனிடம் கொடுத்தார்.

புகைப்படம் வெளியே வைக்கப் போவதால், அழகாக எடு பாஸ்கர்.. என்று அந்த புகைப்படக் கலைஞரிடம் ஜாடை காட்டினார்.

ரமேஷ் புகைப்படத்திற்கு உணர்ச்சி இல்லாதப் பிணம் மாதிரி நின்றான்.

மேடையை விட்டு இறங்கும்போது, கூனிக் குருகிக் கொண்டு இறங்கினான்.

இமையில் கண்ணீர் வடிந்தப்போதும் துடைக்காமல், மெதுவாக வந்து அருகில் அமர்ந்தான்.

இதற்கு… ஐந்து மாதம் அப்பா செருப்பு தைத்து வரும் பணத்திலே, கட்டணம் செலுத்தி இருக்கலாமென்று, தலைக் குணிந்தப்படியே கூறினான்.

– கதைப் படிக்கலாம் – 43           

இதையும் படியுங்கள் : கொடுத்துவைத்த அம்மா

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
Previous Post

அங்கீகரிக்கப்படாத கொரோனா தடுப்பூசியை பயன்படுத்த ஐக்கிய அரபு அமீரகம் முடிவு

Next Post

இன்றைய சதி கோட்பாடு: ஹோமி பாபாவின் (Homi Bhabha) கொலை பற்றியது!

Next Post

இன்றைய சதி கோட்பாடு: ஹோமி பாபாவின் (Homi Bhabha) கொலை பற்றியது!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Most Recent

நிறைவடைந்த BRICS மாநாடு: AI முதல் உலக வர்த்தகம் வரை… டெல்லியில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகள் என்ன?

September 13, 2026

7 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவில் ஜி ஜின்பிங்; மோடி சந்திப்பில் என்ன பேசப்பட்டது?

September 12, 2026

Wipro-வில் 20,000 பேரின் வேலையை AI எடுத்துக்கொண்டதா? உண்மையில் நிறுவனம் சொன்னது என்ன?

September 11, 2026

நாளை டெல்லியில் BRICS உச்சி மாநாடு: ஜி ஜின்பிங் முதல் புதின் வரை உலகத் தலைவர்கள் வருகை; இந்தியாவுக்கு ஏன் முக்கியம்?

September 11, 2026

புகழ்பெற்ற பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா காலமானார்; தமிழுலகின் தனித்துவமான குரல் ஓய்ந்தது!

September 11, 2026

நாளுக்கு 125 கப்பல்கள் சென்ற ஹார்முஸ்… இப்போது வெறும் 7! உலக எண்ணெய் விநியோகத்தின் முக்கிய பாதையில் என்ன நடக்கிறது?

September 11, 2026
Load More

Categories

  • Featured
  • Sponsored Content
  • அரசியல்
  • அறிய வேண்டியவை
  • அறிவியல்
  • ஆட்டோ மொபைல்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி
  • சாதனை மனிதர்கள்
  • சினிமா
  • சிறப்பு கட்டுரைகள்
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தமிழ்நாடு சட்டசபை தேர்தல் 2021
  • தொழில் நுட்பம்
  • படைப்புகள்
  • புகைப்பட தொகுப்பு
  • ராசி பலன்
  • லைப் ஸ்டைல்
  • வணிகம்
  • வலைஒளி
  • விளையாட்டு
  • வேலை வாய்ப்பு
  • About
  • Disclaimers
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact us
For Advertisement
Contact: 9176530083

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

No Result
View All Result
  • Login
  • Cart
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Go to mobile version