மும்பை: நாட்டின் முன்னணி ஐஐடிகளில் இளநிலை டிசைன் படிப்பில் சேருவதற்கான UCEED 2027 நுழைவுத் தேர்வு விண்ணப்பப் பதிவு தொடங்கியுள்ளது.
யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?
2026-ஆம் ஆண்டு பிளஸ் 2 தேர்ச்சி பெற்றவர்கள் மற்றும் 2027-ஆம் ஆண்டு பிளஸ் 2 தேர்வு எழுதவுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். அறிவியல் பிரிவு மட்டுமின்றி வணிகவியல், கலை மற்றும் மானுடவியல் உள்ளிட்ட எந்தப் பாடப்பிரிவைச் சேர்ந்தவர்களும் தேர்வில் பங்கேற்கலாம்.
எந்தக் கல்லூரிகளில் சேரலாம்?
UCEED தேர்வு மதிப்பெண் மூலம் ஐஐடி மும்பை, டெல்லி, கவுகாத்தி, ஹைதராபாத், இந்தூர், ரூர்க்கி மற்றும் IIITDM ஜபல்பூர் ஆகிய கல்வி நிறுவனங்களின் B.Des படிப்புகளில் சேர முடியும்.
முக்கியமான தேதிகள்
வழக்கமான கட்டணத்துடன் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் அக்டோபர் 31. மூன்று மணி நேரம் நடைபெறும் UCEED 2027 நுழைவுத் தேர்வு, 2027 ஜனவரி 17-ஆம் தேதி காலை 9 மணி முதல் நண்பகல் 12 மணி வரை நடத்தப்பட உள்ளது.
விண்ணப்பப் பதிவு மற்றும் முழுமையான தகுதி விவரங்களை UCEED 2027 அதிகாரப்பூர்வ இணையதளத்தில் தெரிந்துகொள்ளலாம். இந்த அறிவிப்பை ஐஐடி மும்பை அக்டோபர் 1-ஆம் தேதி வெளியிட்டுள்ளது.






