கொரோனாவால் தொடரும் பலி – முன்னாள் கிரிக்கெட் வீரர் மற்றும் உ.பி. அமைச்சர் சேதன் சவுகான் மரணம்

கொரோனாவால் தொடரும் பலி –  முன்னாள் கிரிக்கெட் வீரர் மற்றும் உ.பி. அமைச்சர் சேதன் சவுகான் மரணம்
இந்தியாவுக்காக 40 டெஸ்ட் போட்டி,7 ஒரு நாள் போட்டிகளிலும் இந்தியாவுக்காக விளையாடியுள்ளார் சேதன் சவுகான்.சுனில் கவாஸ்கருடன் இணைந்து தொடக்க ஆட்டக்காரராக ஆடியுள்ளார்.தற்போது அவருக்கு 73 வயது. மேலும் கொரோனா நோயால் இறந்த இரண்டாவது உ.பி. அமைச்சர் ஆவார்.

கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற பின் பாஜக.வில் இணைந்தார்.உத்திரப்பிரதேச முதல் அமைச்சர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான அரசில் அமைச்சராகவும் இருந்து வந்தார்.

கடந்த ஜூலை மாதம் 12-ந்தேதி நடந்த பரிசோதனையில் அவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. அவர் லக்னோவில் உள்ள சஞ்சய் காந்தி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.  எனினும், அவரது உடல்நிலை மோசமடைந்தது. இதனால் அரியானாவின் குருகிராமில் உள்ள மேதந்தா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு வென்டிலேட்டர் கருவி பொருத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

இன்று மாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். உத்தர பிரதேச மாநிலத்தில் கொரோனாவுக்கு உயிரிழந்த 2-வது அமைச்சர் இவராவார்.

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *