அடுத்த மாதம் தொடங்கும் “கோவாக்சின்” இரண்டாம் கட்ட பரிசோதனைகள்!!

அடுத்த மாதம் தொடங்கும் “கோவாக்சின்”  இரண்டாம் கட்ட பரிசோதனைகள்!!
நமது நாட்டிலேயே உருவாக்கப்பட்டுள்ள கொரோனா வைரஸ் தடுப்பு மருந்து “கோவாக்சின்” ஏற்கனவே மேற்கொண்ட முதல் கட்ட பரிசோதனைகளில் இதன் முடிவு வெற்றிகரமாக அமைந்துள்ளது.  தற்போது இரண்டாம் கட்ட பரிசோதனைகளில் கவனம் செலுத்தி வருகிறது.

இதைப்பற்றி அசாம் சுகாதார அமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மா

தற்போது, இரண்டாம் கட்ட மருத்துவ பரிசோதனைகளுக்கு, கௌஹாத்தி மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையும் (ஜி.எம்.சி.எச்) பரிசோதனைத் தளங்களில் ஒன்றாகத் தேர்வு  பெற்றுள்ளது  என்று  கடந்த வாரம் தெரிவித்துள்ளார் .

இதன் மூலம் இந்தியா முழுவதும்  சுமார் 2.5 மில்லியனுக்கும் அதிகமான மக்களைப் பாதித்த கொரோனா வைரஸுக்கு ஒரு சிறந்த தடுப்பு  மருந்தை தயாரிக்கும் பணியில் அசாம் முக்கிய பங்கை  மேற்கொள்ள முடியும் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார். மேலும்  “கோவாக்சினின் முதற்கட்ட  சோதனைகள் அனைத்தும் வெற்றிகரமாக முடிக்கப்பட்டுள்ளது.

இதன் இரண்டாம் கட்ட மருத்துவ பரிசோதனைகளுக்கான மையங்களில் ஒன்றாக  பாரத் பயோடெக் மற்றும் ஐசிஎம்ஆர் இணைந்து ஜிஎம்சிஎச்-ஐ தேர்வுசெய்து அறிவித்ததில் நான் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன், ” என்று சர்மா கூறினார். வரும் செப்டம்பரில் இருந்து கோவாக்சினுக்கான இரண்டாம் கட்ட சோதனைகள் முழுவீச்சில் மேற்கொள்ளப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பல  உலக நாடுகள் கொரோனா வைரஸ்  தடுப்பு மருந்துகளைத் தயார் செய்து வருவதால்,  கொரோனா வைரஸ் தடுப்பூசி தயாரிக்கும் செயல்முறை உலகம் முழுவதும் அதிகரித்து காணப்படுகிறது. ஏற்கனவே  ரஷ்யா  ரஷ்யா  அனைவரும் பயன்படுத்தக்கூடிய உலகின் முதல் கொரோனா வைரஸ் தடுப்பு மருந்து – ஸ்பூட்னிக் வி – யைப் பதிவு செய்த  உள்ள முதல் நாடாக உள்ளது தற்போது சீனாவும் அதனுடன் இணைந்து உள்ளது  மூன்றாவதாக இந்தியா இருக்குமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *