டெல்லி இந்தியா கேட் பகுதியில் 144 தடை உத்தரவு

டெல்லி இந்தியா கேட் பகுதியில் 144 தடை உத்தரவு

உத்திரபிரதேசம் மாநிலம் ஹத்ராஸ் இளம்பெண் கொலை சம்பவ எதிரொலியாக டெல்லி இந்தியா கேட் பகுதியை சுற்றி தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

உத்தர பிரதேச மாநிலம் ஹத்ராஸ் மாவட்டத்தில் ஒரு கிராமத்தை சேர்ந்த 19 வயதான பட்டியலின இளம்பெண், கடந்த மாதம் 14-ம் தேதி அங்குள்ள நிலத்தில் புல் அறுத்துக் கொண்டிருந்தார். அப்போது, அக்கிராமத்தை சேர்ந்த உயர் ஜாதி இளைஞர்கள் 4 பேர், அந்த பெண்ணை தூக்கிச்சென்று கூட்டு பாலியல் பலாத்காரம் செய்தனர். அப்போது, பெண்ணை கடுமையாக தாக்கினர். இதை வெளியில் சொல்லக்கூடாது என்பதற்காக, நாக்கையும் அறுத்ததாக தெரிகிறது.

படுகாயங்களுடன் கிடந்த அப்பெண் மீட்கப்பட்டு ஒரு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். இளைஞர்கள் தாக்கியதில், அப்பெண்ணுக்கு முதுகு தண்டுவடம் நொறுங்கி, பல இடங்களில் எலும்பு முறிவு ஏற்பட்டு இருந்ததும் தெரியவந்தது.அதன் பிறகு,உடல்நிலை மோசமடைந்ததால், டெல்லியில் உள்ள சப்தர்ஜங் ஆஸ்பத்திரிக்கு அந்த பெண் மாற்றப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி சமீபத்தில் அவர் உயிரிழந்தார்.

இதனால் நாடு முழுவதும் போராட்டங்கள் நடைப்பெற்று வருகின்றன ஏற்கனவே வேளாண்மை மசோதாவுக்கு எதிராக டெல்லி இந்தியா கேட் பகுதியில் கடந்த செப்டம்பர் 28ந் தேதி டிராக்டர் எரிக்கப்பட்டது. இப்பொழுது ஹத்ராஸ் வழக்குக்கு எதிராக போராட்டங்கள் நடைபெறும் நிலையில் இந்தியா கேட் பகுதியில் போராட்டம் நடைபெறுவதை தடுக்க அந்த பகுதியை சுற்றி தடை உத்தரவு போடப்பட்டுள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *