Saturday, August 29, 2026
  • Login

No products in the cart.

SeithiAlai
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
Shop
No Result
View All Result
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
No Result
View All Result
SeithiAlai
No Result
View All Result
Home இந்தியா

“கல்வி நிறுவனங்கள் ஆராய்ச்சி மையங்களாக உயர வேண்டும்” – துணைக் குடியரசுத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன்

August 29, 2026

ஈரோடு பெருந்துறையில் நடைபெற்ற விழாவில் பங்கேற்பு; AI, ரோபாட்டிக்ஸ், செமிகண்டக்டர் உள்ளிட்ட வளர்ந்து வரும் துறைகளில் இளைஞர்கள் கவனம் செலுத்த அழைப்பு

நாட்டின் முன்னேற்றத்திற்கு ஆராய்ச்சி, புதுமை மற்றும் தொழில்துறை – கல்வி நிறுவனங்கள் இடையேயான ஒத்துழைப்பு மிகவும் முக்கியமானது என்று துணைக் குடியரசுத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

இந்தியாவுக்கு பின்னடைவு; ஆசிய விளையாட்டுப் போட்டியில் நீரஜ் சோப்ரா பங்கேற்க மாட்டார்!

இன்று தேசிய விளையாட்டு தினம்; மேஜர் தயான் சந்துக்கு நாடு மரியாதை!

தரையிறங்கியபோது வெடித்த விமான டயர்; 41 பேரும் பத்திரமாக மீட்பு!

ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் உள்ள கொங்கு வேளாளர் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி டிரஸ்ட்டின் நிறுவனர் தின விழாவில் இன்று துணைக் குடியரசுத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டார்.

விழாவில் ‘அறிவுக்கூடம்’ (Arivukoodam) என்ற வசதியையும் அவர் தொடங்கி வைத்தார்.

“அடிப்படைக் கல்வியுடன் நின்றுவிடக் கூடாது”

விழாவில் பேசிய சி.பி. ராதாகிருஷ்ணன், கல்வி நிறுவனங்கள் அடிப்படைக் கல்வியை வழங்குவதுடன் மட்டும் நின்றுவிடாமல், உலகத் தரத்திலான அறிவு, ஆராய்ச்சி மற்றும் புதுமைக்கான மையங்களாக வளர வேண்டும் என்று வலியுறுத்தினார்.

இளைஞர்கள் தங்களது அறிவை தொடர்ந்து மேம்படுத்திக்கொள்வதுடன், அடிப்படைக் கல்வியில் இருந்து ஆராய்ச்சி சார்ந்த கல்வியை நோக்கி முன்னேற வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

ஆராய்ச்சி மற்றும் புதிய கண்டுபிடிப்புகளில் மாணவர்கள் அதிக கவனம் செலுத்துவதுடன், காப்புரிமைகளைப் பெறும் அளவுக்கு புதிய முயற்சிகளில் ஈடுபட வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

AI முதல் Quantum Technology வரை…

வேகமாக மாறிவரும் தொழில்நுட்ப உலகத்துக்கு ஏற்ப இளைஞர்கள் தங்களை தயார்படுத்திக்கொள்ள வேண்டும் என்று துணைக் குடியரசுத் தலைவர் அறிவுறுத்தினார்.

குறிப்பாக செயற்கை நுண்ணறிவு (AI), ரோபாட்டிக்ஸ், செமிகண்டக்டர், குவாண்டம் தொழில்நுட்பம், உயிரித் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் தொழில்நுட்பம் உள்ளிட்ட வளர்ந்து வரும் துறைகளில் மாணவர்கள் தங்களது திறன்களை வளர்த்துக்கொள்ள வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

“மாற்றம் மட்டுமே மாறாதது”

மாற்றம் மட்டுமே மாறாத ஒன்று என்பதை இளைஞர்கள் புரிந்துகொள்ள வேண்டும் என்று குறிப்பிட்ட சி.பி. ராதாகிருஷ்ணன், ஒவ்வொருவரும் தங்களிடம் உள்ள பலத்தை அறிந்து தெளிவான இலக்குகளை நிர்ணயித்துக்கொள்ள வேண்டும் என்று தெரிவித்தார்.

மற்றவர்களுடன் தங்களை ஒப்பிட்டுக் கொள்வதைத் தவிர்த்து, நிர்ணயித்த இலக்கை அடைவதற்கு விடாமுயற்சியுடன் செயல்பட வேண்டும் என்றும் இளைஞர்களுக்கு அவர் அறிவுரை வழங்கினார்.

ஆராய்ச்சி, புதுமை மற்றும் தொழில்துறை – கல்வித்துறை ஒத்துழைப்பை அதிகரிப்பதன் மூலம் இந்தியாவின் வளர்ச்சிக்கு கல்வி நிறுவனங்கள் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்க முடியும் என்றும் துணைக் குடியரசுத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

நான்கு மாநிலங்கள், யூனியன் பிரதேசத்தில் சுற்றுப்பயணம்

சி.பி. ராதாகிருஷ்ணன் ஆகஸ்ட் 29 முதல் 31 வரை தமிழ்நாடு, கர்நாடகம், கேரளம் மற்றும் லட்சத்தீவில் மூன்று நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.

ஈரோடு நிகழ்ச்சியைத் தொடர்ந்து இன்று பெங்களூரு செல்லும் அவர், விதான சவுதாவில் நடைபெறும் கர்நாடக முன்னாள் முதலமைச்சர் ராமகிருஷ்ண ஹெக்டேவின் நூற்றாண்டு விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்கிறார்.

நாளை கேரளத்தில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளிலும் துணைக் குடியரசுத் தலைவர் பங்கேற்க உள்ளார்.

Share this:

  • Click to share on Facebook (Opens in new window) Facebook
  • Click to share on X (Opens in new window) X
Previous Post

“இது தீண்டாமையின் இன்னொரு வடிவம்”; கார்கே கூட்டத்திற்குப் பின் ‘சுத்திகரிப்பு’ – ராகுல் காந்தி கடும் கண்டனம்

Next Post

“விபத்தில் வந்ததுதான் தவெக ஆட்சி” – தருமபுரியில் எடப்பாடி பழனிசாமி கடும் விமர்சனம்

Next Post

“விபத்தில் வந்ததுதான் தவெக ஆட்சி” - தருமபுரியில் எடப்பாடி பழனிசாமி கடும் விமர்சனம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Most Recent

விண்வெளியில் 6½ மணி நேரம் நடந்த இந்திய வம்சாவளி வீரர் அனில் மேனன்!

August 29, 2026

“விபத்தில் வந்ததுதான் தவெக ஆட்சி” – தருமபுரியில் எடப்பாடி பழனிசாமி கடும் விமர்சனம்

August 29, 2026

“கல்வி நிறுவனங்கள் ஆராய்ச்சி மையங்களாக உயர வேண்டும்” – துணைக் குடியரசுத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன்

August 29, 2026

“இது தீண்டாமையின் இன்னொரு வடிவம்”; கார்கே கூட்டத்திற்குப் பின் ‘சுத்திகரிப்பு’ – ராகுல் காந்தி கடும் கண்டனம்

August 29, 2026

ரூ.30,000 கோடி அரசு பத்திரங்களை திரும்ப வாங்க திட்டம்; RBI மூலம் ஏலம்!

August 29, 2026

இந்தியாவுக்கு பின்னடைவு; ஆசிய விளையாட்டுப் போட்டியில் நீரஜ் சோப்ரா பங்கேற்க மாட்டார்!

August 29, 2026
Load More

Categories

  • Featured
  • Sponsored Content
  • அரசியல்
  • அறிய வேண்டியவை
  • அறிவியல்
  • ஆட்டோ மொபைல்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி
  • சாதனை மனிதர்கள்
  • சினிமா
  • சிறப்பு கட்டுரைகள்
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தமிழ்நாடு சட்டசபை தேர்தல் 2021
  • தொழில் நுட்பம்
  • படைப்புகள்
  • புகைப்பட தொகுப்பு
  • ராசி பலன்
  • லைப் ஸ்டைல்
  • வணிகம்
  • வலைஒளி
  • விளையாட்டு
  • வேலை வாய்ப்பு
  • About
  • Disclaimers
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact us
For Advertisement
Contact: 9176530083

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

No Result
View All Result
  • Login
  • Cart
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Go to mobile version