உள்துறை அமைச்சருக்கு ஊதிய சங்கு…. சீக்கிரம் கோர்ட்ல ஆஜர் ஆகுங்க பங்கு…

உள்துறை அமைச்சருக்கு ஊதிய சங்கு…. சீக்கிரம் கோர்ட்ல ஆஜர் ஆகுங்க பங்கு…

மேற்கு வங்காளத்தை சேர்ந்த எம்.எல்.ஏ ஒருவரை மத்திய உள்துறை அமைச்சர் அவதூறாக பேசியது தொடர்பாக வரும் பிப்ரவரி 22 ல் அமித்ஷாவை நேரில் ஆஜராக சிறப்பு உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

மேற்கு வங்காளம் :

கடந்த 2018 ம் ஆண்டு கொல்கத்தாவில் நடைபெற்ற ஒரு பேரணியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அபிஷேக் பானர்ஜி என்ற எம்.எல்.ஏ தன்னை அவதூறாகப் பேசியதாக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியின் மருமகனான இவர் அரசியலில் ஈடுபட்டு வருகிறார். மேலும், தற்போது நாடாளுமன்ற உறுப்பினராகப் பதவி வகிக்கிறார்.

இந்தநிலையில், மேற்கு வங்கத்தில் உள்ள எம்.பி. மற்றும் எம்.எல்.ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்க அமைக்கப்பட்ட சிறப்பு நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.

Read more – மிக பெரிய வரலாற்று பிழை.. வைக்காதீர்கள் எங்களுக்கு உலை… வருத்தத்தில் நாராயணசாமி

இதையடுத்து, அபிஷேக் பானர்ஜி தொடர்ந்த வழக்கானது நேற்று விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, வரும் பிப்ரவரி 22 ம் தேதி மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நேரிலோ அல்லது வழக்கறிஞர் மூலமாகவோ நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டுமென்று உத்தரவு பிறப்பித்து நோடீஸையும் அனுப்பியுள்ளது.

சட்டசபை தேர்தல் பிரச்சாரத்திற்காக தற்போது மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மேற்கு வங்காளத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

author

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *