குடியரசு தினவிழா அணிவகுப்பு : முதல் முறையாக பங்கேற்கும் வங்காளதேச படைகள்

குடியரசு தினவிழா அணிவகுப்பு : முதல் முறையாக பங்கேற்கும் வங்காளதேச படைகள்

வருகின்ற ஜனவரி 26 ம் தேதி நடைபெறவுள்ள குடியரசு தினவிழா அணிவகுப்பில் வங்கதேச படைகள் முதல் முறையாக பங்கேற்க உள்ளது.

புதுடெல்லி :

டெல்லியில் வருகின்ற 26 ம் தேதி இந்திய குடியரசு தினத்தையொட்டி பிரமாண்டமான விழா நடைபெற இருக்கிறது. இதில் இந்திய முப்படைகளின் அணிவகுப்பு மற்றும் பல்வேறு கலைநிகழ்ச்சிகளும் நடைபெறுகின்றனர்.

குடியரசு தினவிழா ராணுவ அணிவகுப்பில் முதல் முறையாக வங்காளதேச படைகளும் பங்கேற்கிறது. வங்காளதேச நாடு விடுதலை பெற்று 50 வது ஆண்டு நிறைவை தொடர்ந்து இந்திய குடியரசு தின விழா அணிவகுப்பில் அந்த நாடும் கலந்து கொள்கிறது.

Read more – பிரசவத்திற்கு பின் வீடு திரும்ப முடியாமல் தவித்த பெண் : 6 கி.மீ. தூக்கி சென்று உதவிய ராணுவ வீரர்கள்

வங்க தேச நாட்டின் முப்படைகளை சேர்ந்த வீரர்கள் அடங்கிய குழுவினர் இந்த ஆண்டு அணிவகுப்பில் முதலில் செல்வார்கள். அதன்பிறகு வங்காளதேச ராணுவ இசைக்குழுவினரும் பங்கேற்க இருக்கின்றனர். மேலும், இந்திய குடியரசு தின அணிவகுப்பில் பங்கேற்கும் 3 வது வெளிநாட்டு ராணுவம் என்ற பெருமையை வங்காளதேசம் பெற்றுள்ளது. ஏற்கனவே கடந்த 2016 ம் ஆண்டு பிரான்ஸ் மற்றும் 2017 ல் அமீரக நாட்டின் படைகள் இந்த அணிவகுப்பில் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.

author

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *