முன்னாள் உள்துறை அமைச்சர் பணமோசடி வழக்கில் கைது!!

முன்னாள் உள்துறை அமைச்சர் பணமோசடி வழக்கில் கைது!!

மகாராஷ்டிராவின் முன்னாள் உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக்கை அமலாக்கதுறை கைது செய்துள்ளது.

டெல்லி, அனில் தேஷ்முக் மகாராஷ்டிரா மாநிலத்தின் உள்துறை அமைச்சராக இருந்தபோது, மாநிலத்தின் பார் உரிமையாளர்களிடமிருந்து 100 கோடி ரூபாய் வரை லஞ்சம் பெற்றதாக எழுந்த புகாரை தொடர்ந்து அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

பின்னர் இது தொடர்பான விசாரணை அழைத்து அமலாக்கத்துறை பலமுறை சம்மன் அனுப்பியது.ஆனால், அனில் தேஷ்முக் நேரில் ஆஜராக மறுத்ததோடு சம்மனை ரத்து செய்ய கோரி மும்பை உயர்நீதிமன்றத்தை நாடினார். இந்த மனுவை உயர்நீதிமன்றம் நிராகரித்த நிலையில் வேறு வழியின்றி அனில் தேஷ்முக் விசாரணைக்கு ஆஜரானார்.

விசாரணைக்கு ஆஜரானதும் அனில் தேஷ்முக்கிடம் 100 கோடி லஞ்சம் பெற்றது தொடர்பாக பல மணி நேரம் விசாரணை நடைபெற்றது. விசாரணையின் முடிவில் பணமோசடி வழக்கில் தேஷ்முக் கைது செய்யப்பட்டுள்ளார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *