ஹத்ராஸ் பாலியல் குற்றவாளி 4 பேரையும் தூக்கில் போட வேண்டும் – மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே

ஹத்ராஸ் பாலியல் குற்றவாளி 4 பேரையும் தூக்கில் போட வேண்டும் – மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே
ஹத்ராஸ் பாலியல் குற்றவாளிகள் 4 பேரையும் தூக்கில் போட வேண்டும் என்று மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே தெரிவித்துள்ளார்.

உத்தர பிரதேச மாநிலம் ஹத்ராஸ் மாவட்டத்தில் ஒரு கிராமத்தை சேர்ந்த 19 வயதான பட்டியலின இளம்பெண், கடந்த மாதம் 14-ம் தேதி அங்குள்ள நிலத்தில் புல் அறுத்துக் கொண்டிருந்தார். அப்போது, அக்கிராமத்தை சேர்ந்த உயர் ஜாதி இளைஞர்கள் 4 பேர், அந்த பெண்ணை தூக்கிச்சென்று கூட்டு பாலியல் பலாத்காரம் செய்தனர். அப்போது, பெண்ணை கடுமையாக தாக்கினர். இதை வெளியில் சொல்லக்கூடாது என்பதற்காக, நாக்கையும் அறுத்ததாக தெரிகிறது.

படுகாயங்களுடன் கிடந்த அப்பெண் மீட்கப்பட்டு ஒரு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். இளைஞர்கள் தாக்கியதில், அப்பெண்ணுக்கு முதுகு தண்டுவடம் நொறுங்கி, பல இடங்களில் எலும்பு முறிவு ஏற்பட்டு இருந்ததும் தெரியவந்தது.அதன் பிறகு,உடல்நிலை மோசமடைந்ததால், டெல்லியில் உள்ள சப்தர்ஜங் ஆஸ்பத்திரிக்கு அந்த பெண் மாற்றப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி சமீபத்தில் அவர் உயிரிழந்தார்.

இதையடுத்து, டெல்லியிலும், உத்தர பிரதேசத்திலும் தொடர்ந்து போராட்டங்கள் வெடித்தன. அரசியல்வாதிகள், திரையுலகினர், விளையாட்டுத் துறையினர் என பல்வேறு தரப்பினரும் நீதி கேட்டு குரல் கொடுத்தனர். கூட்டு பலாத்காரத்தில் ஈடுபட்ட 4 இளைஞர்களும் கைது செய்யப்பட்டனர்.

இந்த நிலையில், ஹத்ராஸ் பாலியல் குற்றவாளிகள் 4 பேரையும் தூக்கிலிட வேண்டும் என மத்திய மந்திரி ராம்தாஸ் அத்வாலே தெரிவித்துள்ளார்.இதுதொடர்பாக அவர் நாளை நான் லக்னோ செல்கிறேன். முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் மற்றும் ஆளுநர் ஆனந்திபென் படேல் ஆகியோரை சந்தித்துப் பேச உள்ளேன். குற்றவாளிகள் 4 பேரையும் தூக்கில் போட வேண்டும் என தெரிவித்துள்ளார்.

author

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *