மின்வாரிய திருத்த மசோதாவை கைவிட வேண்டும் ஸ்டாலின் பேச்சு

மின்வாரிய திருத்த மசோதாவை கைவிட வேண்டும் ஸ்டாலின் பேச்சு

மின்வாரிய திருத்த மசோதாவை கைவிட வேண்டும் என்று முதலமைச்சர் ஸ்டாலின் பேசினார்.

Tamil Nadu NEET row: CM MK Stalin blames AIADMK | Coimbatore News - Times  of India

தென்மண்டல் முதலமைச்சர் மாநாடு உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் நடைபெற்று வருகிறது. இம்மாநாட்டில் கேரள முதல்வர்  பினராயி விஜயன், கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை, ஆந்திரா, தெலங்கானா மாநில முதல்வர்கள் சார்பில் பிரதிநிதிகள் கலந்து கொண்டுள்ளனர். தமிழ்நாட்டின் சார்பில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு பேசினார்.

Image

முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: மின்வாரிய திருத்த மசோதாவை கைவிட வேண்டும். ஜிஎஸ்டி அமலானதால் மாநிலங்களுக்கு நிதிச்சுமை ஏற்பட்டுள்ளது. மத்தியில் கூட்டாட்சி, மாநிலத்தில் சுயாட்சி என்பதில் தமிழ்நாடு உறுதியாக உள்ளது. மாநிலங்களுக்கு ஜிஎஸ்டி வழங்கும் காலத்தை மத்திய அரசு மேலும் நீட்டிக்க வேண்டும். புதுப்பிக்கத்தக்க எரிசக்தியை பயன்படுத்துவதில் தமிழ்நாடு முன்னோடி மாநிலமாக உள்ளது. வெள்ள பாதிப்பு உள்ளிட்டவற்றுக்கான நிதியை உடனடியாக விடுவிக்க வேண்டும். நீட் தேர்வில் விலக்கு தேவை. நமது மொழிகள் அனைத்தும் திராவிட மொழி குடும்பத்தை சேர்ந்தவை. யாதும் ஊரே, யாவரும் கேளிர் என்ற உணர்வோடு அனைத்து பிரச்சனைகளையும் தீர்த்திட வேண்டும். அடுத்த தென்மண்டல கூட்டத்தை தமிழ்நாட்டில் நடத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

author

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *