ஐ.ஏ.எஸ் அதிகாரிகளின் டார்ச்சர்..ஆட்டோ ஓட்டும் அரசு மருத்துவர்

ஐ.ஏ.எஸ் அதிகாரிகளின் டார்ச்சர்..ஆட்டோ ஓட்டும் அரசு மருத்துவர்
கர்நாடகாவில் ஐஏஎஸ் அதிகாரிகளின் தொல்லையால் வேலையை உதறவிட்டு அரசு மருத்துவர் ஒருவர், ஆட்டோ ஓட்ட தொடங்கி இருப்பது அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

பல்லாரி மாவட்டத்தில் உள்ள பிம்ஸ் அரசு மருத்துமனையில் தடுப்பூசி நிபுணராக பணியாற்றி வந்தவர் ரவிந்திரநாத். சுழற்சி முறையில் அல்லாமல் கொரோனா சிறப்பு வார்டில் தினமும் அவரை பணியாற்றும்படி அதிகாரிகள் வற்புறுத்தியதாக கூறப்படுகிறது. இதனால் மன உளைச்சல் அடைந்த அவர் அதிகாரிகளுடன் வாக்குவாத்தில் ஈடுபட்டுள்ளார்.

அதனைத் தொடர்ந்து அவர் கட்டாய விடுப்பில் அனுப்பப்பட்ட நிலையில், விடுப்பு முடிந்து பணிக்கு வந்த மறுநாள் மீண்டும் அவருக்கு கட்டாய விடுப்பு அளிக்கப்பட்டுள்ளது . இதனால் மனம் உடைந்த ரவீந்திரநாத் வேலையை உதறிவிட்டு, தனது இந்த முடிவுக்கு சுகாதாரத் துறை மற்றும் மருத்துவத் துறையில் உள்ள 4 ஐ . ஏ . எஸ் . அதிகாரிகள் தான் காரணம் என குற்றம்சாட்டியுள்ளார் .

குடும்பத்தினருடன் தனது சொந்த ஊரான பாட கிராமத்திற்கு சென்ற ரவீந்திரநாத் அங்கு ஆட்டோ ஓட்டி பிழைப்பு நடத்தி வருகிறார் . ஆட்டோவின் முன் மற்றும் பின் பகுதியில், அதிகாரித்தால் தனக்கு கடுமையான தொல்லைகளை கொடுத்ததாக சில ஐஏஎஸ் அதிகாரிகள் பெயர்களை எழுதியுள்ளார்.

இதுகுறித்து தகவல் அறிந்த மாநில சுகாதாரத் துறை அமைச்சர் ஸ்ரீராமுலு, மருத்துவர் ரவீந்திரநாத்தை தொடர்பு கொண்டு பேசினார். அப்போது தங்களது குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும், என்னை நேரில் வந்து சந்தித்து உங்கள் பிரச்சினைகளை தெரிவியுங்கள், மீண்டும் பணியில் சேருங்கள் என கேட்டுக் கொண்டுள்ளார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *