கொரோனா தொற்றில் இருந்து மீண்ட தேசியவாத காங்கிரஸ் எம்.எல்.ஏ. பரத் பால்கே மரணம்

கொரோனா தொற்றில் இருந்து மீண்ட தேசியவாத காங்கிரஸ் எம்.எல்.ஏ. பரத் பால்கே மரணம்
கொரோனா தொற்றில் இருந்து மீண்ட தேசியவாத காங்கிரஸ் எம்.எல்.ஏ. பரத் பால்கே உடல் நலக்குறைவால் மரணமடைந்தார்.

புனே:

மராட்டியத்தில் சிவசேனா தலைமையிலான கூட்டணி கட்சியில் அங்கம் வகிக்கும் தேசியவாத காங்கிரஸ் கட்சியில் பந்தர்பூர்-மங்கள்வேதா தொகுதியை சேர்ந்த எம்.எல்.ஏ. பரத் பால்கே.இவருக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு,பின்பு சிகிச்சை பெற்று வந்த அவர் குணமடைந்து வீடு திரும்பினார்.

அதன்பிறகும் அவருக்கு தொடர்ந்து உடல்நல குறைவு ஏற்பட்டது.இதன் காரணமாக அவரை புனே ரூபி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு வென்டிலேட்டர் மூலம் சிகிச்சையும் வழங்கப்பட்டு வந்தது.

இந்த நிலையில் இன்று காலை எம்.எல்.ஏ. பரத் பால்கே சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் .இதுகுறித்து மராட்டிய சுகாதார துறை அமைச்சர் ராஜேஷ் தோப் தனது ட்விட்டர் பக்கத்தில்,எம்.எல்.ஏ. பரத் பால்கே மரணம் கேட்டு என் மனம் அதிர்ச்சி அடைந்தது.அவரது குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கல் என்று பதிவிட்டு இருந்தார்.

author

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *