சசிகலா விடுதலை அடையும் நாளன்று சிறை நிர்வாகம் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் : கர்நாடக உளவுத்துறை அறிவிப்பு

சசிகலா விடுதலை அடையும் நாளன்று சிறை நிர்வாகம் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் : கர்நாடக உளவுத்துறை அறிவிப்பு

சசிகலா விடுதலை அடையும் நாளன்று சிறை நிர்வாகம் பின்பற்ற வேண்டிய வழிமுறைகளை கர்நாடக உளவுத்துறை வெளியிட்டுள்ளது.

பெங்களூர்:

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா சொத்து குவிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டு பெங்களூரு பரப்பன அக்ரஹார மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இன்று வரை சசிகலா சிறை தண்டனை அனுபவித்து வரும் நிலையில் வருகின்ற அடுத்த வருடம் ஜனவரி மாதம் 27 ம் தேதி விடுதலை செய்யப்பட உள்ளார்.

சசிகலா விடுதலை குறித்து ஏற்கனவே கர்நாடக சிறைத்துறை தகவல் பெறும் உரிமை சட்டத்தின் கீழ் வெளியிட்டது.தற்போது சசிகலா விடுதலை அடையும் நாளன்று சிறை நிர்வாகம் பின்பற்ற வேண்டிய வழிமுறைகளை கர்நாடக உளவுத்துறை வெளியிட்டுள்ளது.

சசிகலா விடுதலை அடையும் நாளன்று,அவரை காண ஏராளமான தொண்டர்கள் வர வாய்ப்புள்ளதால் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படாத வகையில் தொண்டர்களின் வாகனங்களை சிறை அமைந்துள்ள பகுதிக்கு வராத வகையில் தடுத்து நிறுத்தப்பட வேண்டும்.சசிகலாவின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு மற்ற கைதிகளை போல் 7 மணிக்கு விடுதலை செய்யாமல்,இரவு 9.30 மணிக்கு விடுதலை செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read more – விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து சீக்கிய மதகுரு உயிர்த்தியாகம் : துப்பாக்கியால் சுட்டு தற்கொலை

மேலும்,தமிழக மற்றும் கர்நாடக எல்லை பகுதியான அத்திபள்ளி வரை அவருக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த வாகனத்தில் பாதுகாப்பாய் அழைத்து செல்லவும் ஏற்பாடு செய்யப்பட்டும்,அன்றைய நாளன்று சூழ்நிலைக்கு ஏற்ப சில மாற்றங்களை செய்யவும் சிறைத்துறைக்கு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது.

author

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *