காவல்துறை தலைமை அலுவலகம் அருகில் பெண்ணுக்கு நடந்த கொடுமை : பொதுமக்களிடையே அதிர்ச்சி

காவல்துறை தலைமை அலுவலகம் அருகில் பெண்ணுக்கு நடந்த கொடுமை : பொதுமக்களிடையே அதிர்ச்சி

மத்திய பிரதேச மாநிலத்திலுள்ள காவல்துறை தலைமையகத்திற்கு அருகில் பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

போபால்:

மத்திய பிரதேச மாநிலம் போபாலில் உள்ள நீலம் பூங்கா அருகில் தினக்கூலி வேலை பார்க்கும் 35 வயது மதிக்கத்தக்க பெண் உடல்நிலை சரியில்லாத நிலையில் மருத்துவமனைக்கு சென்றுவிட்டு வீட்டுக்கு திரும்பி உள்ளார்.

அப்பொழுது சிறிது மயக்கம் ஏற்படவே நீலம் பூங்காவில் சற்று நேரம் ஓய்வு எடுத்தநிலையில், அங்கு வந்த ஒரு 25 வயது மிக்க வாலிபர் ஒருவர் அந்தப் பெண்ணை கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். மேலும், சுமார் 500 மீட்டர் தொலைவில் காவல்துறை தலைமை அலவலகத்தின் அருகில் இந்த சம்பவம் நடந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Read more – கொரோனா காலத்தில் 15 வகையான பாரம்பரியமான நெல்லை சாகுபடி செய்த பொறியாளர்..

காவல்துறையினர் சந்தேகத்தின் பேரில் 25 வயது நிரம்பிய வாலிபர் ஒருவரை கைது செய்ததன் அடிப்படையில் அந்த வாலிபர் நீலம் பூங்கா அருகில் ஜவுளிக்கடை வைத்துள்ளார் என்பது தெரியவந்துள்ளது. மேலும், காவல்துறை தலைமையகத்திற்கு அருகில் பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் பொதுமக்களிடடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

author

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *