அன்லாக் 5.0: திரையரங்குகள், பொழுதுபோக்கு பூங்காக்களை திறக்க மத்திய அரசு அனுமதி

அன்லாக் 5.0: திரையரங்குகள், பொழுதுபோக்கு பூங்காக்களை திறக்க மத்திய    அரசு அனுமதி

கொரோனா பரவலை கட்டுப்படுத்த அமல்படுத்தப்பட்ட ஊரடங்கில் ஐந்தாம் கட்ட தளர்வுகளை மத்திய அரசு அறிவித்ததுள்ளது.

கொரோனா பரவலை கட்டுப்படுத்த அமலப்படுத்தப்பட்ட ஊரடங்கில், அன்லாக் என்ற முறையில் மத்திய அரசு படிப்படியாக தளர்வுகளை வழங்கி வருகிறது. அதன்படி 5ம் கட்டமாக பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. அக்டோபர் 15ம் தேதி முதல் அமலுக்கு வர உள்ள தளர்வுகளின் விவரங்கள் பின்வருமாறு:

  • 50 சதவிகித பார்வையாளர்களை மட்டும் அனுமதித்து திரையரங்குகளை திறக்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.
  • தியேட்டர்கள் மட்டுமின்றி மல்டி பிளக்ஸ் தியேட்டர்களும் அதே வழிகாட்டுதலுடன் செயல்பட அனுமதி
  • விளையாட்டு வீரர்களுக்கான நீச்சல் குளங்களை திறக்க அனுமதி
  • பொழுது போக்கு பூங்காக்களையும் அக்டோபர் 15 ஆம் தேதி முதல் திறக்க அனுமதி
  • பள்ளி, கல்லூரிகளை திறப்பது குறித்து மாநில அரசுகள் முடிவு எடுக்கலாம்
  • நோய் கட்டுப்பாடு பகுதிகள் தவிர மற்ற இடங்களில் மாநில அரசுகள் கட்டுப்பாடுகளை விதிக்கக் கூடாது
  • நோய் கட்டுப்பாடு பகுதிகளில் கட்டுபாடுகளை தீவிரமாக அமல்படுத்த வேண்டும்
  • அக்டோபர் 31 ஆம் தேதி வரை ஊரடங்கு கட்டுபாடுகளை அமல்படுத்தலாம் என மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *