தேசிய தகவல் தொடர்பு மையத்தில் காலியாக உள்ள விஞ்ஞானி – பி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
நிர்வாகம் : தேசிய தகவல் தொடர்பு மையம் (NIELIT)
மேலாண்மை : மத்திய அரசு
பணி : விஞ்ஞானி – பி
மொத்த காலிப் பணியிடங்கள் : 10
வயது வரம்பு :
விண்ணப்பதாரர் 30 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும். அரசு விதிமுறைகளின்படி குறிப்பிட்ட பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும்.
கல்வித் தகுதி : MCA (Master of Computer Application),B.E,B.Tech,M.E,M.Tech,M.Sc போன்ற துறையில் தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணியிடத்திற்கு விண்ணப்பிக்கலாம்.
ஊதியம் : ரூ.56,100 முதல் ரூ.1.77 லட்சம் வரை
விண்ணப்பிக்கும் முறை : விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் வழியாக https://apply-delhi.nielit.gov.in/ என்ற இணையதளம் மூலம் 31.12.2020 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
தேர்வு முறை : எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பக் கட்டணம் :
பொது மற்றும் ஓ.பி.சி. விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் – ரூ. 800
மற்ற அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் (எஸ்.டி. / எஸ்.சி./ பி.டபிள்யு.டி/பெண்கள்) விண்ணப்ப கட்டணம் ரூ. 400
பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் www.nielit.gov.in என்னும் அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்தினைக் காணவும்.