டிப்ளமோ முடித்தவர்களுக்கு வரைவாளர் பணியிடம்.. தமிழக அரசு அறிவிப்பு

டிப்ளமோ முடித்தவர்களுக்கு வரைவாளர் பணியிடம்.. தமிழக அரசு அறிவிப்பு

தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறைக்கு உட்பட்டு திருநெல்வேலியில் காலியாக உள்ள இளநிலை வரைவாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

நிர்வாகம் : தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை- திருநெல்வேலி

மேலாண்மை : தமிழக அரசு

பணி : இளநிலை வரைவாளர்

கல்வித் தகுதி :

டிப்ளமோ சிவில் பொறியியல் துறையில் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

வயது வரம்பு :

விண்ணப்பதாரர் 35 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
அரசு விதிமுறைகளின்படி குறிப்பிட்ட பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும்.

ஊதியம் : ரூ.35,400 முதல் ரூ.1,12,400 வரை

விண்ணப்பிக்கும் முறை : விண்ணப்பதாரர்கள் https://Tirunelveli.nic.in/ என்ற இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து அதனை பூர்த்தி செய்து அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு 08.12.2020 தேதிக்குள் கிடைக்குமாறு அனுப்ப வேண்டும்.

தேர்வு முறை : எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறிய, https://Tirunelveli.nic.in/ என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்யவும்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *